குன்றத்தூர்: வாடகை பாக்கி கேட்ட வீட்டு உரிமையாளர் கொலை!

 

குன்றத்தூர்: வாடகை பாக்கி கேட்ட வீட்டு உரிமையாளர் கொலை!

குன்றத்தூரில் நான்கு மாத வீட்டு வாடகை பாக்கியை கேட்டதால் உரிமையாளரைக் குத்திக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை குன்றத்தூரைச் சேர்ந்தவர் குணசேகர். இவர் தன்னுடைய வீட்டை அஜித் என்ற இளைஞருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக தொழில்கள் முடங்கிய நிலையில் கடந்த நான்கு மாதமாக அஜித் வீட்டு வாடகையைத் தரவில்லை. நான்கு மாத வாடகையையும் செட்டில் செய்ய வேண்டும் என்று வீட்டு உரிமையாளர் குணசேகர் கேட்டுள்ளார். இதில் அஜித்துக்கும் குணசேகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஜித், குணசேகரை ஓட ஓட விரட்டி குத்திக் கொலை செய்தார்.

குன்றத்தூர்: வாடகை பாக்கி கேட்ட வீட்டு உரிமையாளர் கொலை!இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு வாடகை கேட்டதால் உரிமையாளர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக வேலை இழப்பு, பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் சொந்த ஊர் திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வாடகை பாக்கி கொடுக்க முடியாத பலரும் வாடகையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். வாடகை வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

குன்றத்தூர்: வாடகை பாக்கி கேட்ட வீட்டு உரிமையாளர் கொலை!இதுதவிர மின்சார கட்டணம், உணவு, மருத்துவ செலவு என்று வரிசையாக பல்வேறு அச்சுறுத்தல்கள். இதை அரசு உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இது போன்ற கொலை, தற்கொலை சம்பவங்கள் நடப்பதை தடுக்க முடியாது என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.