சென்னை Vs கோவா – வெற்றி பெறப்போவது எது? ISL கால்பந்து திருவிழா

 

சென்னை Vs கோவா – வெற்றி பெறப்போவது எது? ISL கால்பந்து திருவிழா

ISL கால்பந்து திருவிழாவில் தினந்தோறும் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் north east united அணியை எதிர்த்து ஆடியது ஜாம்ஷெட்பூர் அணி.

இதில் ஆட்டத்தில் 53 வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் அங்கிட் ஜாதவ் ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஆட்டம் முடியும்வரை இரு அணிகளும் கோல் அடிக்க வில்லை. அதனால் 1: 0 எனும் கணக்கில் ஜாம்ஷெட்பூர் வென்றது.

சென்னை Vs கோவா – வெற்றி பெறப்போவது எது? ISL கால்பந்து திருவிழா

இன்றைய போட்டி சென்னை Vs கோவா அணிகளுக்கு இடையே இரவும் 7.30 மணிக்கு கோவா திலக் மைதானத்தில் நடக்கிறது.

சென்னை அணி 5 போட்டிகளில் ஆடி ஒன்றில் மட்டும் வென்று, 2-ல் தோற்று, 2-யை டிராவாக்கி 8-ம் இடத்தில் உள்ளது.

சென்னை Vs கோவா – வெற்றி பெறப்போவது எது? ISL கால்பந்து திருவிழா

கோவா அணியோ 6 போட்டிகளில் ஆடி 2 -ல் வென்று இரண்டில் தோற்று, இரண்டை டிராவாக்கி 8 புள்ளிகளோடு 7-ம் இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் சென்னை வென்றால் 7-ம் இடத்திற்கு முன்னேறும். கோவா வென்றால் 4-ம் இடத்திற்குச் செல்லக்கூட வாய்ப்பிருக்கிறது.