சென்னை
சென்னையில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் வானகரம் பூ மார்க்கெட் மேற்கூரையில் இருந்த இரும்பு தகடுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்றிரவு முதல் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வானகரத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக பூமார்க்கெட்டின் மேற்கூரையில் பொருத்தப்பட்ட இரும்பு தகடுகள் காற்றில் தூக்கிவீசப்பட்டன. மேலும், மார்க்கெட்டின் நுழைவு பகுதியில் மழைநீர் வடிய வசதி இல்லாததால் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது.

இதனால் பொதுமக்கள் மழைநீரில் நனைந்த படி மார்கெட்டிற்கு சென்று பூக்களை வாங்கிச்சென்றனர். இதனிடையே, மார்கெட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக மின்பெட்டி நீரில் மூழ்கியதால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.