• February
    17
    Monday

Main Area

Main



ஆபாச வீடியோக்கள் பார்ப்பதில் சென்னை முதலிடம்... ஐபி அட்ரஸ் ரெடி.. விரைவில் வீடு தேடி வருகிறது காவல்துறை!

ஆபாச படங்கள்
ஆபாச படங்கள்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகளை  வைத்து எடுக்கப்படும் ஆபாச படங்களை பார்ப்பவரின் எண்ணிகையும் அதிகமாகியுள்ளது. இதனால் குழந்தைகள் சம்மந்தப்பட்ட ஆபாச  வீடியோக்கள் பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.க்கு புகார்கள் சென்றுள்ளன. புகாரின் அடிப்படையில் ஆய்வில் இறங்கிய போலீசார், முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. 

porn

அதில், குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை அதிகம் பார்க்கும் நாடு இந்தியா என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதில் சென்னை  முதலிடம் பிடித்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அமெரிக்க புலனாய்வு அமைப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக காவல்துறை  உரிய நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

ttn

இதுகுறித்து கூறியுள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் ஏடிஜிபி ரவி, குழந்தைகளை  வைத்து எடுக்கப்படும் ஆபாச படங்களை பார்ப்பது சட்டப்படி குற்றம்.  குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்போரின் ஐபி முகவரி மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் தமிழக காவல்துறைக்கு வந்துள்ளது. அதன்படி குற்றவாளிகள்  விரைவில் கைது செய்யப்படுவார்கள். குறிப்பாகக் குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் கார்ட்டூன் பரப்பும் வாட்ஸ்அப் குழுக்களின் அட்மின்கள் கைது செய்யப்படுவார்கள் ' என்று எச்சரித்துள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.