`எங்களை ஜெயிலில் போட்டாலும் எங்களின் சட்டக்குழு ஜாமீனில் எடுத்துவிடும்’ – கூல் கொள்ளையர்கள்; ஷாக்கான போலீஸார்!

 

`எங்களை ஜெயிலில் போட்டாலும் எங்களின் சட்டக்குழு ஜாமீனில் எடுத்துவிடும்’ – கூல் கொள்ளையர்கள்; ஷாக்கான போலீஸார்!

கொரோனா ஊரடங்கிலும் ஓயாத செயின் பறிப்பு சம்பவங்களால் சென்னை பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

சென்னை மாநகரத்தில் கொரோனாவுக்கு முன் தினமும் 10க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. அதிலும் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகின. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், வேலை இல்லாத இளைஞர்கள் புதிய கொள்ளையர்கள் இந்தச் செயின், செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். செயின், செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட முதலில் பைக்கை திருடும் இந்தக் கும்பல், பிறகு பெண்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து வந்தனர்.

`எங்களை ஜெயிலில் போட்டாலும் எங்களின் சட்டக்குழு ஜாமீனில் எடுத்துவிடும்’ – கூல் கொள்ளையர்கள்; ஷாக்கான போலீஸார்!

சென்னையில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு மக்கள் பைக், கார்களில் செல்கின்றனர். இந்தச் சமயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் காஞ்சிபுரம் ஓரகடத்தில் உள்ள தனியார் செல்போன் கம்பெனிக்கு வேலைக்குச் செல்ல இன்ஜினீயர் கீதபிரியா (28) என்பவர் அதிகாலை 5.30 மணியளவில் தனியாக அலுவலக பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 சிறுவர்கள், கீதபிரியாவின் செல்போனை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர் அவர்களை ஆட்டோவில் சென்று துரத்திய கீதபிரியா ஒரு சிறுவனைப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன்பிறகு இன்னொரு சிறுவனையும் போலீஸார் பிடித்து கீதபிரியாவின் செல்போனை மீட்டனர். இந்த 2 சிறுவர்களும் கீதபிரியாவிடம் செல்போனை பறிப்பதற்கு முன், இன்னொருவரிடம் செல்போனும் பைக்கையும் திருடியுள்ளனர். திருட்டு பைக்கில்தான் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

`எங்களை ஜெயிலில் போட்டாலும் எங்களின் சட்டக்குழு ஜாமீனில் எடுத்துவிடும்’ – கூல் கொள்ளையர்கள்; ஷாக்கான போலீஸார்!

பெரும்பாலும் செல்போன், செயின் பறிப்பு சம்பவங்களில் 18-வயதுக்கு குறைவானவர்களே ஈடுபடுகின்றனர். அதற்கு சிறுவர்களின் தவறான வாழக்கைப்பாதையே காரணம். படிக்கிற வயதில் பந்தா வாழ்க்கைக்கும் போதை வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு தடமாறிவிடுகின்றனர். பெரும்பாலும் கஞ்சா போதைக்கு சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் அடிமையாகியுள்ளனர். செல்போன், செயின் பறிப்பு சம்பவங்களில் கைதாகும் இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள் ஆகியோரில் பலர் சொல்லும் பதில் கஞ்சா போதை. அவர்களின் நல்வழிப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது.

இந்தச் சூழலில் சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் காமராஜர் சாலையில் வசிக்கும் திலகவதி (54) என்பவர் 10-ம் தேதி ஆர்.கே மடம் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிக் கொண்டிருந்ததார். அப்போது பைக்கில் வந்த மர்ம கும்பல் தங்கச் செயின் பறித்தது. இதுகுறித்து திலகவதி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இணை கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. செயின்பறிப்பு சம்பவம் நடந்த இடத்திலிருந்து பைக் சென்ற வழிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தார். சுமார் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்திருப்பார்கள். அபிராமபுரத்தில் தொடங்கிய ஆய்வு எண்ணூர் வரை நீடித்தது. இருப்பினும் போலீஸார் பொறுமையாக ஒவ்வொரு சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போதுதான் போலீஸாருக்கு சில தடயங்கள் சிக்கின. அதன்அடிப்படையில் விசாரித்தபோது அனைத்தும் திருட்டு பைக்குள். அவை அனைத்தும் ஒவ்வொரு காவல் நிலையங்களில் திருட்டு போனதாக புகாரளிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து பைக் திருட்டு நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.

`எங்களை ஜெயிலில் போட்டாலும் எங்களின் சட்டக்குழு ஜாமீனில் எடுத்துவிடும்’ – கூல் கொள்ளையர்கள்; ஷாக்கான போலீஸார்!

அப்போது பைக்குகளைத் திருடியவர்கள்தான் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. கொரோனா ஊரடங்கு பாதுகாப்புகளுக்கிடையேயும் போலீஸார் செயின் பறிப்பு கொள்ளையர்களை விடாமல் தேடிவந்தனர். போலீஸாரின் நீண்ட தேடுதல் வேட்டைக்குப்பிறகு செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது புளியந்தோப்பைச் சேர்ந்த அபிமன்யூ (21), சித்தாலப்பாக்கம் அஜய்ராகுல் (20), புளியந்தோப்பைச் சேர்ந்த நசீர் என தெரியவந்தது. இவர்களிடமிருந்து 7 சவரன் தங்கச் செயின் மற்றும் 8 பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

`எங்களை ஜெயிலில் போட்டாலும் எங்களின் சட்டக்குழு ஜாமீனில் எடுத்துவிடும்’ – கூல் கொள்ளையர்கள்; ஷாக்கான போலீஸார்!

போலீஸாரிடம் சிக்கியவர்களிடம் விசாரித்தபோது இந்தக் கூட்டத்துக்கு தலைவனாக பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவன் செயல்பட்டுள்ளான். இவனின் கூட்டாளிகள் அதிகாலை நேரத்தில் 2 பிரிவுகளாக பிரிந்து செல்வார்கள். நடைபயிற்சி செய்யும் பெண்களை பின்தொடர்ந்து செயின், செல்போன்களை பறிப்பார்கள். அதற்கு முன் அதிவேகமாகச் செல்லும் பைக்குகளை திருடுவார்கள். அந்தப் பைக்கில் ஹெல்மெட் அணிந்தப்படி செல்வார்கள். கண்இமைக்கும் நேரத்தில் செயின், செல்போனைப் பறித்து விட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிடுவார்கள். சிசிடிவி கேமராவில் முகம் தெரியாது. மேலும் பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் விசாரித்தால் அது திருட்டு பைக் என்றுதான் தெரியவரும்.

`எங்களை ஜெயிலில் போட்டாலும் எங்களின் சட்டக்குழு ஜாமீனில் எடுத்துவிடும்’ – கூல் கொள்ளையர்கள்; ஷாக்கான போலீஸார்!

அதனால் போலீஸாரிடம் இந்தக் கும்பல் அவ்வளவு எளிதில் சிக்கமாட்டார்கள். செயின், செல்போன் பறிப்பு மூலம் கிடைக்கும் பணத்தில் உல்லாசமாகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்துவந்துள்ளனர். கையில் பணம் இல்லை என்றதும் செயின், செல்போன் பறிக்க புறப்பட்டுவிடுவார்கள்.

`எங்களை ஜெயிலில் போட்டாலும் எங்களின் சட்டக்குழு ஜாமீனில் எடுத்துவிடும்’ – கூல் கொள்ளையர்கள்; ஷாக்கான போலீஸார்!
இந்தக் கும்பல் சென்னை புளியந்தோப்பு, அண்ணா நகர், மாதவரம், திருவேற்காடு, கோட்டூர்புரம், அபிராமபுரம், ராயபுரம், எம்கேபி நகர் என 13 க்கும் மேற்பட்ட இடங்களில் 8 அதிவேக பைக்குகளைத் திருடியுள்ளனர். மேலும் ஏராளமான பெண்களிடமிருந்து செயினையும் பறித்துள்ளனர். அதனால் இந்தக் கும்பலிடமிருந்து 64 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் நாங்கள் பைக் மற்றும் செயினை மட்டும்தான் திருடுவோம். செல்போனை வழிப்பறி செய்தால் அதை விற்பதில் பல பிரச்னைகள் வருகின்றன. ஆனால் இன்று தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் தங்கச் செயின்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. அதனால்தான் முழு நேர செயின் பறிப்பு கொள்ளையர்களாக மாறிவிட்டோம். எங்களை ஜெயிலில் போட்டாலும் எங்களின் சட்டக்குழு ஜாமீனில் எடுத்துவிடும் என்று கூலாக சொல்லியுள்ளனர். அதைக்கேட்டு போலீஸார் ஒரு கணம் ஷாக்காகியுள்ளனர்.

-எஸ்.செல்வம்