சென்னை முதலில் பேட்டிங் – பிராவோ ஆட வில்லை

 

சென்னை முதலில் பேட்டிங் – பிராவோ ஆட வில்லை

ஐபிஎல் தொடரில் இன்றைய மோதல் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடந்து முடிந்த 9 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்று 6 புள்ளிகளோடு 7-ம் இடத்தில் உள்ளது சென்னை.

சென்னை முதலில் பேட்டிங் – பிராவோ ஆட வில்லை

ராஜஸ்தான் ராயல் அணியும் 9 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வென்று எட்டாம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல் அணியும் 6 புள்ளிகள்தான். ஆனால், நெட் ரன்ரேட் அடிப்படையில் சற்று முந்தைய இடத்தில் உள்ளது சென்னை.

சென்னை முதலில் பேட்டிங் – பிராவோ ஆட வில்லை

இன்றைக்கு நடைபெறும் போட்டி என்பது இரு அணிகளுக்கும் மிக முக்கியமானது. இரு அணிகளுக்கும் ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல சிறு வாய்ப்பு கிடைக்க உதவும் போட்டி இது. அதனால், இரு அணிகளும் வெற்றிக்குக் கடுமையாகப் போராடும்.

சென்னை முதலில் பேட்டிங் – பிராவோ ஆட வில்லை

டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். மகேந்திர சிங் தோனி கேப்டனாக தனது 200 வது ஐபிஎல் போட்டியை ஆடுகிறார்.

சென்ற போட்டியில் கேதார் ஜாதவ்க்கு மறுபடியும் வாய்ப்பு அளித்தது ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. இம்முறை அவரே இடம்பெறுவாரா… இல்லை ஜெகதீஷன் அல்லது ருத்ராஜ் ஓப்பனிங் இறங்க வாய்ப்பளிக்கப்படுமா என்று ஆவலோடு பார்த்த நிலையில், இன்றும் கேதார் ஜாதவ் அணியில் இடம்பிடித்திருக்கிறார்.

சென்னை முதலில் பேட்டிங் – பிராவோ ஆட வில்லை

பிராவோ சென்ற போட்டியில் காயம் அடைந்திருந்தார். அவர் இன்று ஆடுவாரா என்பது சந்தேகம் என்ற நிலையில், அவர் இன்றைய லெவன் அணியில் இல்லை. சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா இடம்பிடித்துள்ளார்.