சென்ன டீம் முதலில் பேட்டிங் – கேதார் ஜாதவ் நீக்கம்

 

சென்ன டீம் முதலில் பேட்டிங் – கேதார் ஜாதவ் நீக்கம்

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இண்டியன்ஸ். இந்தச் சீசனில் இரண்டாம் முறை இந்த அணிகள் மோதுகின்றன. முதல்முறை அசத்தலான வெற்றியப் பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், அதற்கு அடுத்த போட்டிகளில் பெரும்பாலானவற்றில் பெரும் தோல்வியையே சந்தித்தது தோனியின் படை.

சென்னை 10 போட்டிகளில் ஆடி, 3 -ம் மட்டுமே வென்று ஐபிஎல் பாயிண்ட் டேபிளில் கடைசி இடத்தில் இருக்கிறது, மும்பை அணியோ 9 போட்டிகளில் ஆடி, 7 -ல் வென்று மூன்றாம் இடத்தில் உள்ளது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மூன்றுமே வலுவாக உள்ளது மும்பை.

சென்ன டீம் முதலில் பேட்டிங் – கேதார் ஜாதவ் நீக்கம்

இன்றைய போட்டி மும்பைக்கு வெற்றி அவசியமல்ல, ஆனால் சென்னைக்கு வெற்றி மிகவும் அவசியம்.

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஃபீல்டிங் தேர்வு செய்தார். அதனால், முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். மும்பை கேப்டன் ரோஹித் இன்று ஆட வில்லை. அவருக்குப் பதில் பொல்லார்டு கேப்டனாக இருப்பார்.

சென்ன டீம் முதலில் பேட்டிங் – கேதார் ஜாதவ் நீக்கம்

சென்னை அணியில் கேதார் ஜாதவ் நீக்கப்பட்டிருக்கிறார். ருத்ராஜ், ஜெகதீஷன் சேர்க்கப்பட்டுள்ளனர். வாட்சன், பியூஷ் சாவ்லாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு இம்ரான் தாகீர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.