ஆசிரியர்களின் கவனத்திற்கு… இந்த தேதிக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்!

 

ஆசிரியர்களின் கவனத்திற்கு… இந்த தேதிக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்!

கொரோனா வைரஸிலிருந்து நம்மை காத்துக்கொள்ள தடுப்பூசி தான் ஒரே வழி என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால், மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மத்தியிலும் முன்பு இல்லாத அளவுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. தடுப்பூசி மையத்தை கண்டாலே மக்கள் பயந்து ஓடிய நிலை மாறி, மக்களே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் கவனத்திற்கு… இந்த தேதிக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்!

திடீரென மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்ததால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அதை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றன. காவலர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அந்தந்த துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாவட்ட பள்ளி ஆசிரியர்கள் வரும் 20-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரை வழங்கியுள்ளார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தடுப்பூசி போட வேண்டும் என்றும் தடுப்பூசி போடாதவர்கள் அதற்கான காரணத்தை பெற்று வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.