சென்னை
சென்னை பூந்தமல்லி அருகே பார்சல் சிக்கனில் எலும்பு இல்லாததால், ஓட்டல் சப்ளையரை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள உணவத்தில், சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் சிக்கன்

வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று சாப்பிட்டபோது கறியில் எலும்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி தனது நண்பருடன் உணவகத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது சாகுல் ஹமீது என்ற சப்ளையரின் கண்ணத்தில் பலமாக அறைந்துள்ளார். இதில் சாகுல் ஹமீது நிலைகுழைந்து போன நிலையில், அவரது காது பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உணவக ஊழியர்கள் கார்த்தியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பூந்தமல்லி போலீசார், தலைமறைவாக உள்ள கார்த்தியை வலை வீசி தேடி வருகின்றனர்.