Home விளையாட்டு கிரிக்கெட் கோலியை வெல்வாரா தோனி! கேதார் ஜாதவ் இன்று ஆடுவாரா? CSKvsRCB

கோலியை வெல்வாரா தோனி! கேதார் ஜாதவ் இன்று ஆடுவாரா? CSKvsRCB

இன்றைய ஐபில் திருவிழாவில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியோடு மோதுகிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

இரண்டாம் போட்டியில் மோதுகின்றன சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல்சேலஞ்சர்ஸ் பஞ்சாப் அணிகள்.

வழ்க்கமாக அனைத்து ஐபிஎல் போட்டிகளில் பாயிண்ட் டேபிளில் ஆர்சிபி பின் வரிசையில்தான் இருக்கும். இந்த வருஷம் சற்று முன்னே வந்தது. யார் கண் பட்டதோ மீண்டும் பின் தங்கி விட்டது. 5 போட்டிகளில் 3-ல் வென்று 6 புள்ளிகளோடு 5-ம் இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் நிலை இன்னும் மோசம். ஆறு போட்டிகளில் அடி இரண்டில் மட்டுமே வென்று ஆறாம் இடத்தில் இருக்கிறது. அதுவும் ராஜஸ்தான் ராயல் அணி மோசமாக தோற்றதால் சென்னை ஒரு இடம் மேலே உள்ளது இல்லையெனில், 7-ம் இடம்தான். அதனால், இந்தப்போட்டி மட்டுமல்ல, இனி ஒவ்வொரு போட்டியும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது சென்னை.

ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல இந்த வெற்றி இரு அணிகளுக்குமே அவசியம் என்பதால் நிச்சயம் கடும் போராட்டம் நடக்கும்.

சென்னை அணியில் முரளி விஜயால் ஓப்பனிங் சிக்கல் இருந்தது. அவரை மூன்று போட்டிகள் வரை பார்த்து தூக்கினார்கள். வாட்ஸனும் டூ பிளஸியும் அருமையான ஓப்பனிங் தந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த சீசனில் தான் இறங்கிய ஒரு போட்டியிலும் ஒழுங்காக ஆடவில்லை கேதார் ஜாதவ். அதிலும் சென்ற கொல்கத்தாக்கு எதிரான போட்டியில் சென்னையின் தோல்விக்கு முழு பொறுப்பு கேதார் ஜாதவ் மட்டுமே. இந்நிலையில் இன்று அவரை மீண்டும் இறக்குவார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான். ஒருவேளை அவரையே இறக்கினால், கடும் விமர்சனத்தை தோனி எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவர் இல்லையெனில் வேறு யாரை இறக்குவது என்ற கேள்வியும் இருக்கிறது.

ருத்ராஜ் கெய்க்வாட்டுக்குக் கொடுத்த வாய்ப்புகளில் சொதப்பி விட்டர். நாராயணன் ஜெகதீஷனை இறக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். புதுமுக வீரர் எப்படி ஆடுவார் என்பது சந்தேகமே… மேலும் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெகதீஷன் இருவருமே ஓப்பனிங் வீரர்கள். மிடில் ஆர்டரில் இறக்கினால் முழு திறனைக் காட்டுவது கடினமே. அதற்காக மீண்டும் கேதர் ஜாதவையே இறக்குவதா என்றால்…. பெரும் குழப்பம்தான். ரெய்னா இருந்திருந்தால் இந்தச் சிக்கல் வந்திருக்காது. என்ன முடிவெடுக்க போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

பவுலிங்கில், பிராவோ, தாக்கூர், சாம் கர்ரன், தீபக் சாஹர் என நன்றாகவே வீசி வருகிறார்கள்.

பெங்களூர் அணியைப் பொறுத்தவரை ஓப்பனிங் தேவ்தத் படிக்கல், ஆரோன் பின்ச் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். அடுத்து கோலி, டிவில்லியர்ஸ், மொய்ன் அலி என ஆர்டர் நன்றாகவே இருக்கிறது.

பவுலிங்கில் சஹல், சைனி, உடானா, வாஷிங்டன் சுந்தர், சிராஜ் என பேட்ஸ்மேன்களை வீழ்த்த காத்திருக்கிறார்கள்.

இருவருக்குமே வெற்றி தேவை எனும் இக்கட்டான சூழல். எனவே இன்றைய ஆட்டத்தில் டாஸ் வின் பண்ணும் அணி 200 எனும் பெரிய ஸ்கோரில் நிறுத்த முயலும். ஒருவேளை அது பெங்களூர் அணியாக இருக்கும்பட்சத்தில் சென்னை சேஸ் செய்வது சிரமம்தான். ஆனாலும், தோனியின் ’மேஜிக்’ ஏதாவது செய்து வெற்றியைப் பறித்துவிடும் எனக் காத்திருப்போம்.

மாவட்ட செய்திகள்

Most Popular

நிதிஷ் அரசை கவிழ்க்க தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்களுக்கு வலை வீசிய லாலு… சுஷில் குமார் பகீர் தகவல்

பீகாரில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் நிதிஷ் குமார் அரசை கவிழ்க்க, சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்களுக்கு வலை வீசியதாக பா.ஜ.க.வின் சுஷில் குமார்...

கரையை கடக்க தொடங்கியது புயல்! வேலூர், திருவண்ணாமலைக்கு மழை எச்சரிக்கை!

நிவர் புயல் கரையைக் கடக்க தொடங்கி உள்ளது. இதையொட்டி உச்ச கட்ட கண்காணிப்பில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இது...

புயல் பாதித்த பகுதிகளில் வேலை நிறுத்தம் இல்லை! தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு!

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் நாளை அறிவித்திருந்த பொது வேலை நிறுத்தம், புயல் பாதித்த பகுதிகளில் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!