சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இண்டியன்ஸ் – கடைசி 5 மேட்ச்கள் #Flashback

 

சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இண்டியன்ஸ் – கடைசி 5 மேட்ச்கள் #Flashback

நாளை மறுநாள் (செப்டம்பர் 19) ஐபிஎல் திருவிழா கோலாகலமாகத் தொடங்க உள்ளது. கொரோனா நோய்த் தொற்றால் இந்தியாவில் நடத்த முடியாத சூழலில். ஐக்கிய அமீரகத்தில் நடக்கிறது ஐபிஎல் 2020.

முதல் போட்டியில் மோதப்போவது சென்னை சூப்பர் கிங்ஸூம் மும்பை இண்டியன்ஸூம் தான். இரு அணிகளுமே சம வலிமை கொண்ட அணிகள் என்பதால், நிச்சயம் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்றே நம்பலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இண்டியன்ஸ் – கடைசி 5 மேட்ச்கள் #Flashback

முதல் போட்டியில் வெல்லப்போவது யாரு என்ற ஆவல் நாம் எல்லோருக்குமே இருக்கும். அதைத் தெரிந்துகொள்ள இரண்டு நாட்கள் பொறுமையாகக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால், இதுவரையில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இண்டியன்ஸ் மோதல்களில் கடைசி ஐந்து போட்டிகளின் விவரங்களைப் பற்றி ஒரு நினைவூட்டிப் பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இண்டியன்ஸ் – கடைசி 5 மேட்ச்கள் #Flashback

ONE:  சென்ற ஐபிஎல் போட்டியில் 4 முறைகள் சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இண்டியன்ஸ் மோதிக்கொண்டன. அதற்கு முந்தைய ஐபிஎல் 2018 ல் ஏப்ரல் 28 –ம் தேதி புனேவில் நடந்தது.

முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பதி ராயுடு 46 ரன்களும், சுரேஷ் ரெயானா 75 ரன்களும் (ஆட்டமிழக்காமல்), தோனி 26 ரன்களும் எடுக்க அணியின் ஸ்கோர் 169 ஆக முடிவானது.

அடுத்து ஆடிய, மும்பை இண்டியன்ஸ் அணியில்  யாதவ் 44 ரன்கள், லிவிஸ் 47 ரன்கள், ஆட்டமிழக்காமல் ரோஹித் சர்மா 56 ரன்களும் எடுத்து மீதம் இரண்டு பந்துகள் இருக்கும் நிலையில் 170 ரன்களை எடுத்து வெற்றிகண்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இண்டியன்ஸ் – கடைசி 5 மேட்ச்கள் #Flashback

TWO: ஐபிஎல் 2019 –ல் மும்பையில் ஏப்ரல் 3 –ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இண்டியன்ஸ் இரு அணிகளும் போட்டியிட்டன. அதில் முதலில் ஆடிய மும்பை அணியில், யாதவ் 59 ரன்களும், கே.ஹெச். பாண்டியா 42 ரன்களும் ஹெச்.ஹெச். பாண்டியா 25 ரன்களும் எடுக்க அணியின் ஸ்கோர் 170 ஆக முடிவானது.

அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், சுரேஷ் ரெய்னா, 16, ஜாதவ் 58 ரன்களும் மற்றவர்கள் சொற்பமாக ரன்கள் எடுக்க 133 ரன்களுள் சுருட்டப்பட்டு தோல்வியைக் கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இண்டியன்ஸ் – கடைசி 5 மேட்ச்கள் #Flashback

THREE:  ஐபிஎல் 2019 –ல் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இண்டியன்ஸ் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த மும்பை இண்டியன்ஸ் அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா 67 ரன்களும், லிவிஸ் 32 ரன்களும் எடுக்க, அணியின் ஸ்கோர் 155 என முடிவானது.

அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முரளி விஜய் 38 ரன்களும், பிராவோ 2ப் ரன்களும் எம்.ஜெ.சந்தர் 22 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் மிகச் சொற்பமான ரன்களே எடுத்தனர். இதனால், 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களுக்குள் சுருண்டது சிஎஸ்கே. இந்தப் போட்டியிலும் வெற்றி மும்பை இண்டியன்ஸ்கே.

சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இண்டியன்ஸ் – கடைசி 5 மேட்ச்கள் #Flashback

Four:  ஐபிஎல் 2019 –ல் சென்னையில் மே 7 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இண்டியன்ஸ் போட்டியிட்டன.  முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முரளி விஜய் 26, ராயுடு 42, தோனி 37 ரன்கள் என மோசமாக விளையாடியதால் 131 ரன்கள் மட்டுமே அணியின் ஸ்கோர் முடிவானது.

அடுத்து ஆடிய மும்பை இண்டியன்ஸில் யாதவ் 71 ரன்களும், இஷான் கிசான் 28 ரன்களும் எடுக்க எளிதாக 132 ரன்களை எடுத்தது. இப்போட்டியிலும் மும்பை இண்டியன்ஸ் அணியே வெற்றி வாகை சூடியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இண்டியன்ஸ் – கடைசி 5 மேட்ச்கள் #Flashback

FIVE: ஐபிஎல் 2019 –ன் இறுதிப் போட்டி மும்பையில் நடந்தது. இப்போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள். ஏனெனில், கடைசி பந்து வரை விறுவிறுப்புடன் சென்றது.

முதலில் பேட்டிங் பிடித்த மும்பை இண்டியன்ஸ் அணியில் டி காக் 29 ரன்கள், இஷான் கிசான் 23 ரன்கள், பொலார்ட் 41 ரன்கள் என பகிர்ந்து எடுத்து 149 என அணியின் ஸ்கோரை நிறுத்தினார்கள்.

எளிதாக வென்றுவிடக்கூடும் என நினைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஓப்பனிங் வீரர் ஷேன் வாட்சன் நிலைத்து நின்று ஆடி 80 ரன்களை எடுத்தார். ஆனால், அவருக்கு பார்டனர்ஷிப் தர யாருமே தயாராக இல்லை. ஆனாலும், பிராவோ நம்பிக்கை அளிக்கும்படிஆடி, 148 ரன்களைச் சேர்த்தனர். ஒரே ஒரு ரன்னில் இந்தப் போட்டியை மட்டுமல்ல, ஐபிஎல் 2019 கோப்பையையும் தவற விட்டனர்  சென்னை சூப்பர் கிங்ஸ் அனி.அதனால், மூன்றாம் முறையாக மும்பை இண்டியன்ஸ் கோப்பையை வென்றது.