Home விளையாட்டு கிரிக்கெட் கொல்கத்தாவின் பிளே ஆஃப்’ வாய்ப்பைத் தடுக்குமா சென்னை? #ipl #CSKvsKKR

கொல்கத்தாவின் பிளே ஆஃப்’ வாய்ப்பைத் தடுக்குமா சென்னை? #ipl #CSKvsKKR

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

8 புள்ளிகளோடு ஐபில் பாயிண்ட் டேபிளில் கடைசி இடத்தில் இருக்கிறது சென்னை. அதனால், இன்றைய வெற்றி நிச்சயம் அடுத்த சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்பை அளிக்கப் போவதில்லை. ஒருவேளை இந்தப் போட்டி மற்றும் அடுத்த போட்டியிலும் சென்னை வென்றால் பாயிண்ட் டேபிளில் கடைசி இடம் என்பதில் மாற்றம் வரக்கூடும்.

ஆனால், கொல்கத்தாவுக்கு இன்றைய போட்டி ரொம்ப ரொம்ப முக்கியமானது.  இன்று கொல்கத்தா வென்றுவிட்டால் பஞ்சாப் அணியை கீழே இறக்கி நான்காம் இடத்திற்குச் சென்றுவிடும். ஒருவேளை எதிர்பார்க்காத அளவுக்கு ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் இன்னும் ஓரிடம் முன்னேறக்கூட முடியலாம். ஏனெனில் நெட் ரன்ரேட் எப்படிக் கணிக்கப்படுகிறது என்று கமெண்ட்ரி பாக்ஸில் இருப்பவர்களால்கூட தெளிவாகச் சொல்ல முடியவதில்லை.

இன்றைய போட்டியில் கொல்கத்தா வென்று, அடுத்த போட்டியில் ராஜஸ்தானையும் வென்று விட்டால் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

சென்னை அடுத்த போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி விட்டால், கொல்கத்தாவுக்கு இன்னும் எளிதாக இருக்கும்.

இன்று சென்னை வென்றுவிட்டால், நாளை நடக்கும்  ராஜஸ்தான் vs பஞ்சாப் போட்டியில் இரு அணிகளும் உயிரைக் கொடுத்து ஆடும். அதுவும் தற்போது 12 புள்ளிகளோடு இருக்கும் பஞ்சாப்க்கு அந்த வெற்றி ரொம்பவே முக்கியம்.

சென்னை vs கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் கேதார் ஜாதவ் ஆடிய மோசமான ஆட்டத்தால் சென்னை தோற்றது. முதலில் ஆடிய கொல்கத்தா அணியை 167 ரன்கள் எனும் சேஸிங் செய்யமுடிகிற ஸ்கோரில் நிறுத்தினார்கள் சென்னை பவுலர்கள். பிராவோ ரன்களைக் கொடுத்தாலும் 3 விக்கெட்டுகளைப் பறித்தார்.

சென்னை டீமில் பேட்டிங்கும் நன்றாகவே இருந்தது. டூ பிளஸி 50, ராயுடு 30 என அடித்தார்கள். 18 பந்துகளுக்கு 39 ரன்கள் எனும் அளவுக்கு வெற்றியைத் தொடுமளவே இருந்தது. ஆனால், 18 ஓவரை ரஸல் வீச, முதல் பந்தில் சாம்கரன் அவுட்டாக, ஜடேஜா உள்ளே வந்தார். அவரும் அங்கிருந்த கேதார் ஜாதவும் சேர்ந்து அந்த ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்தனர். இரண்டு டாட் பால்கள், ஒரு விக்கெட்.

19 ஓவரில் ஸ்ட்ரைக்கில் இருந்த ஜடேஜா முதல் பந்தில் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தில் பவுண்ட்ரி விளாசினார் ஜாதவ். ஆனால், அடுத்த பந்து டாட், அதற்கு அடுத்தது சிங்கிள் என வீணடித்தார். ஸ்ட்ரைக் வந்த ஜடேஜா பவுண்ட்ரிக்குப் பந்தை விரட்டினார். இந்த ஓவரில் பத்து ரன்கள் வந்தாலும் வெற்றிக்கு உதவவில்லை.

20 வது ஓவரில் ஸ்ட்ரைக் கேதார் ஜாதவ். 6 பந்துகளில் 26 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைமை. ரஸல் வீச, முதல் இரண்டு பந்துகளை டாட் பால்களாக்கினார் ஜாதவ். தோல்வி உறுதியானது. அடுத்த பந்தில் சிங்கிள் எடுக்க, அடுத்த மூன்று பந்திகளில் இரண்டு பவுண்ட்ரி, ஒரு சிக்ஸரை ஜடேஜா அடித்து பயனில்லாமல் போனது. 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வென்றது.

சென்ற போட்டியில் பெங்களூரை வென்ற உற்சாகத்தில் சென்னை களமிறங்க, பிளே ஆஃப் சுற்று வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது கொல்கத்தா.

மாவட்ட செய்திகள்

Most Popular

பழைய ஹைதராபாத்தில் பாகிஸ்தானியர்கள் இருந்தால் அதற்கு மோடியும், அமித் ஷாவும் பொறுப்பு… ஓவைசி

பழைய ஹைதராபாத்தில் பாகிஸ்தானியர்கள் இருந்தால் அதற்கு மோடியும், அமித் ஷாவும் தான் பொறுப்பு என்று பா.ஜ.க.வுக்கு அசாதுதீன் பதிலடி கொடுத்துள்ளார். தெலங்கானா பா.ஜ.க. தலைவர் பாண்டி...

கிளர்ச்சியில் ஈடுபடாதீங்க.. டிசம்பர் 3ம் தேதி பேசுவோம்.. விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர்

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான வேறுபாடுகளை தீர்க்க விவசாயிகளை டிசம்பர் 3ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

இயற்கைக்கு மாறான இந்த மகா விகாஸ் அகாடி அரசாங்கம் நீண்ட நாள் நீடிக்காது.. தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான இயற்கைக்கு மாறான இந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கம் நீண்ட நாள் நீடிக்காது என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

இரவு ஊரடங்கால் உற்சாகமான திருடர்கள்… குஜராத்தில் கடைகளை உடைத்து பல லட்சம் பொருட்கள் கொள்ளை

குஜராத்தில் அமலில் உள்ள இரவு ஊரடங்கை பயன்படுத்தி, கடைகளை உடைத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி,...
Do NOT follow this link or you will be banned from the site!