’CSK –வுக்கே கப்’ இப்படிச் சொல்லும் ஆஸ்திரேலிய வீரர் இவர்தான்!

 

’CSK –வுக்கே கப்’ இப்படிச் சொல்லும் ஆஸ்திரேலிய வீரர் இவர்தான்!

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக சம்மரின் மாபெரும் கேளிக்கையாக ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு போட்டியும் இறுதி வரை சஸ்பென்ஸோடு செல்லும்.

கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் கேள்வி உருவானது. போட்டிக்கான அறிவிப்பு தள்ளிக்கொண்டே சென்றது. இறுதியில் நோய்த் தொற்றின் வீச்சு அதிகமாக இருந்ததால் ஐபிஎல் போட்டிகள் கைவிடப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்திய அணி விளையாடும் பல போட்டிகள் கைவிடப்பட்டன.

’CSK –வுக்கே கப்’ இப்படிச் சொல்லும் ஆஸ்திரேலிய வீரர் இவர்தான்!

இந்த ஆண்டு கைவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ஐக்கிர அமீரகத்தில் செப்டம்பரில் தொடங்குகிறது. இப்போட்டித் தொடரின் இறுதிப்போட்டி நவம்பரில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 15 –ம் தேதி தொடங்கி ஒரு வாரம் பயிற்சியை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மேற்கொள்ள விருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகத் தொடர்ந்து கூல் கேப்டன் தோனியே இருந்து வருகிறார். தமிழக ரசிகர்களும் அவருக்கு ஸ்பெஷல் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

’CSK –வுக்கே கப்’ இப்படிச் சொல்லும் ஆஸ்திரேலிய வீரர் இவர்தான்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றது. 5 போட்டிகளில் ரன்னர் அப்பாக இடம்பெற்றது. அதனால் இந்த அணி ஆடும் போட்டிகள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

மகேந்திர சிங் தோனி  தலைமையில், சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடஜா உள்ளிட்ட சீனியர் வீரர்களுடன் இந்த ஆண்டு களம் இறங்குகிறது.

’CSK –வுக்கே கப்’ இப்படிச் சொல்லும் ஆஸ்திரேலிய வீரர் இவர்தான்!

ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ ஒரு பேட்டியில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அனுபவம் மிக்க வீரர்கள் அதிகமாக இருப்பதே அதன் பலம். அது கப் வெல்ல வாய்ப்பிருக்கிறது’ என்று தெரிவித்திருக்கிறார்.

CSK ரசிகர்கள் பிரட் லீயின் கருத்தைக் கேட்டு உற்சாகமாக போட்டியைக் காணத் தயாராகி வருகின்றனர்.