#IPL2021: தனது 200வது ஐபிஎல் ஆட்டத்தில் களமிறங்காமலேயே சிஎஸ்கேவை வெற்றிப்பெற வைத்த தோனி!

 

#IPL2021: தனது 200வது ஐபிஎல் ஆட்டத்தில் களமிறங்காமலேயே சிஎஸ்கேவை வெற்றிப்பெற வைத்த தோனி!

ஐபிஎல் தொடரின் 8வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. சென்னை அணி தனது முதல் போட்டியில் தோல்வியையும் பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் வெற்றியும் பெற்று இருந்தது. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

#IPL2021: தனது 200வது ஐபிஎல் ஆட்டத்தில் களமிறங்காமலேயே சிஎஸ்கேவை வெற்றிப்பெற வைத்த தோனி!

பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். சென்னை அணியின் தீபக் சஹார் ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அவர்களின் அருமையான ஸ்விங் பந்தில் மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில்,பூரன், தீபக் ஹூடா ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறினார். மேலும் கேப்டன் கே எல் ராகுல் ரன் அவுட் ஆக , பஞ்சாப் அணி 50 தாண்டுமா என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் பஞ்சாப் அணிக்காக களமிறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த ஷாரூக்கான் பொறுப்புடன் ஆடினார்.தனி ஒருவனாக போராடிய ஷாரூக்கான் 36 பந்துகளில் 2 சிஸ்சர் மற்றும் நான்கு பவுண்டரிகள் உட்பட 47 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.இதன் மூலம் பஞ்சாப் அணியை 100 ரன்கள் கடந்தது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியின் பந்து வீச்சாளர் தீபக் சாகர் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

107 என்ற எளிய இலக்கை துரத்திய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டு பிளஸிஸ் மற்றும் ருத்துராஜ் கெய்வாட் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே தடுமாறிய கெய்வாட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்பு பாப் டு பிளஸிஸ் மற்றும் மொழிகளில் ஜோடி சேர்ந்து சென்னை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். சிறப்பாக ஆடிய மொயின் அலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு வந்த ரெய்னா 8 ரன்களிலும்,ராயுடு வேறு ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.பிறகு பாப் டு பிளஸிஸ் மற்றும் சாம் கரண் நிதானமாக ஆடி வெற்றியை உறுதி செய்தனர்.15.4 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.பாப் டு பிளஸிஸ் 36 ரன்களுடனும் சாம் கரண் 5 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.