தமிழகத்துக்கு 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சிஎஸ்கே

 

தமிழகத்துக்கு 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சிஎஸ்கே

கொரோனா நோயாளிகளுக்காக 450 ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி நிர்வாகம் தமிழக முதலமச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது.

தமிழகத்துக்கு 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சிஎஸ்கே

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் 2 ஆம் ஆலை அதிவேகமாக பரவி வருகிறது. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் அவதிப்படும் நோயாளிகளைவிட ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி உயிரிழக்கும் நோயாளிகளே அதிகமாக உள்ளனர்.

இந்நிலையில் சிஎஸ்கே வழங்கிய ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அரசு மற்றும் சென்னை மாநகராட்சி நடத்தும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2021 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் “மாஸ்க் போடு” பிரச்சாரத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் கூறுகையில், “சென்னை மற்றும் தமிழ்நாடு மக்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இதய துடிப்பை உருவாக்குகிறார்கள், மேலும் தொற்றுநோய்க்கு எதிரான இந்த போராட்டத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இந்த உதவியை செய்கிறோம்” என்று கூறினார்.