முன்னாள் கேப்டன் vs இந்நாள் கேப்டன்: ஆர்சிபிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே!

முன்னாள் கேப்டன் vs இந்நாள் கேப்டன்: ஆர்சிபிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே!

ஐபிஎல் தொடரில் 19ஆவது போட்டியில் இன்று தோனி தலைமையிலான சிஎஸ்கேவும் கோலியின் ஆர்சிபியும் மோதுகின்றன. ஐபிஎல் வரலாற்றிலேயே இப்படியொரு சீசனை ஆர்சிபி கண்டிருக்காது என்றே சொல்ல வேண்டும். அந்த அணி தொடர்ச்சியாக நான்கு போட்டிகள் வெற்றிபெற்றதற்கான சுவடுகள் வரலாற்றிலேயே இல்லை.

முன்னாள் கேப்டன் vs இந்நாள் கேப்டன்: ஆர்சிபிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே!
முன்னாள் கேப்டன் vs இந்நாள் கேப்டன்: ஆர்சிபிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே!

முந்தைய சீசன்களில் என்னவெல்லாம் குறையாக இருந்ததோ அதையெல்லாம் சரிசெய்து இந்த சீசனில் ஆர்சிபி கெத்து காட்டுகிறது. இளம் வீரர்களாக சிராஜ், ஹர்சல் படேலின் பவுலிங் ஃபார்ம் எதிரணியினரை மிரள வைக்கிறது. பல கோடிகளுக்கு விலைக்கு வாங்கியதற்கான விசுவாசத்தை மேக்ஸ்வெல் ஒவ்வொரு போட்டியிலும் நிரூபிக்கிறார். அவர் மீது கோலி அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்.

சென்னை ஃபிட்ச்சில் திணறிய படிக்கல் பயங்கரமாக ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். அதிரடி சதத்தை வான்கடேவில் அவர் அடித்து ராஜஸ்தானை தெறிக்கவிட்டார். பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைச் சுவைத்து வருகிறது ஆர்சிபி. சென்னையிலேயே கொளுத்தி எடுத்த மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் பேட்டிங் ஃபிட்ச்சான வான்கடேவில் ருத்ரதாண்டவம் ஆடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முன்னாள் கேப்டன் vs இந்நாள் கேப்டன்: ஆர்சிபிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே!

சிஎஸ்கே பொறுத்தவரை கடந்த ஆண்டில் என்னென்ன தவறுகள் செய்ததோ அதை அனைத்தையும் திருத்திக் கொண்டு பலம் வாய்ந்த அணியாக கம்பேக் கொடுத்திருக்கிறது. பவர்ப்ளே ஸ்பெஷலிஸ்ட் சஹர் செம ஃபார்மில் இருக்கிறார். கடந்த இரு போட்டிகளில் பவர்ப்ளேயில் 8 விக்கெட்டுகளைச் சாய்த்து அதகளம் செய்திருக்கிறார். அவருடன் இங்கிடி கைகோர்க்க இருவரும் எதிரணியின் பவர்ப்ளே ஆட்டத்தை டெஸ்ட் ஆட்டமாக மாற்றிவிடுகிறாகள். அதேபோல சிஎஸ்கே அணியின் பேட்டிங் தான் வேற லெவலில் இருக்கிறது. இங்கிடி தவிர்த்து மற்ற அனைவரும் பேட்டிங் செய்பவர்கள் என்பதே அந்த அணியின் கூடுதல் சக்சஸ்.

முன்னாள் கேப்டன் vs இந்நாள் கேப்டன்: ஆர்சிபிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே!

ரெய்னா அணிக்குத் திரும்பியது சிஎஸ்கேவுக்கு பூஸ்டாகவே இருக்கிறது. அதேபோல புதுமுகம் மொயின் அலி பேட்டிங், பவுலிங் என எதிரணிக்குச் சிம்மசொப்பனமாக இருக்கிறார். குறிப்பாக சர்வதேச போட்டிகளில் விராட் கோலியை 9 முறை வீழ்த்தி நல்ல ரெக்கார்டையும் வைத்திருக்கிறார். அதனால் கோலி vs மொயின் அலி காம்போவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் கடந்த போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் இடம்பெறவில்லை. கொல்கத்தாவுடனான ஆட்டத்தில் வின்டேஜ் தோனி எட்டிப் பார்த்திருப்பதால், இன்றைய ஆட்டம் அனல் பறக்கும் என்றே தெரிகிறது.

முன்னாள் கேப்டன் vs இந்நாள் கேப்டன்: ஆர்சிபிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே!

கோலிக்கும் டாஸுக்கும் ராசியில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. கடந்த போட்டியில் டாஸ் போட்ட பிறகு வழக்கம் போல தான் ஜெயிக்கவில்லை என போய்விட்டார். அதற்குப் பிறகே வர்ணனையாளர் நீங்கள் தான் டாஸ் ஜெயித்தீர்கள் என்று கூறி அவரை அழைத்தார். தான் டாஸ் ஜெயித்துவிட்டேனா என கோலியே ஷாக் ஆகிவிட்டார். அந்தளவிற்கு டாஸுக்கும் கோலிக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இன்றும் அவர் டாஸில் தோல்வியுற்றார். டாஸ் வென்ற தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முன்னாள் கேப்டன் vs இந்நாள் கேப்டன்: ஆர்சிபிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே!

அணி விவரம்:

சிஎஸ்கே: தோனி, ரெய்னா, இம்ரான் தாஹிர், டுபிளெஸ்சிஸ், ருதுராஜ், சாம் கரண், ஜடேஜா, பிராவோ, சஹர், தாக்கூர், அம்பத்தி ராய்டு

ஆர்சிபி: கோலி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், வாசிங்டன் சுந்தர், கிறிஸ்டியன், ஜெமிசன், சஹல், ஹர்சல் படேல், சிராஜ், சைனி, படிக்கல்