நாளை முதல் சென்னை புறநகர் ரயில் சேவை பகுதியாக ரத்து!

 

நாளை முதல் சென்னை புறநகர் ரயில் சேவை பகுதியாக ரத்து!

தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் 3ஆவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றுவருகிறது. இதனால் ரயில் சேவைகள் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் இருந்தன. இதனால் அத்தியாவசிய பணிகளுக்குச் செல்பவர்களும் வணிகர்களும் ஏழை மக்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அனைத்து ரயில்களிலும் படிக்கட்டுகளில் பயணிகள் தொங்கி கொண்டிருந்தனர்.

நாளை முதல் சென்னை புறநகர் ரயில் சேவை பகுதியாக ரத்து!

தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனால் கடந்த இரண்டு நாளாக ரயில் சேவை பெருமளவு தடைப்பட்டது. அனைத்து ரயில்களும் பல்லாவரத்திலிருந்தே இயக்கப்பட்டன. செங்கல்பட்டுக்கோ, தாம்பரத்திற்கோ ரயில்கள் இயக்கப்படவில்லை. இச்சூழலில் தற்போது அடுத்த புறநகர் ரயில் சேவையில் அதிரடி மாற்றத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை முதல் சென்னை புறநகர் ரயில் சேவை பகுதியாக ரத்து!

அதன்படி சென்னை சென்ட்ரல் டூ கூடூர், எளாவர் டூ கும்மிடிப்பூண்டி ஆகிய இரு மார்க்கங்களிலும் பராமரிப்புப் பணிகள் தொடங்கவிருக்கின்றன. இந்தப் பணிகளின் காரணமாக நாளை முதல் ரயில் சேவை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. முழுநேரமாக இல்லாமல் பகுதிநேரமாக ரயில்கள் இயங்கும் என்றும், மீதி நேரங்களில் ரயில்கள் சேவை ரத்து செய்யப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.