சென்னை ஏர்போர்ட்டில் பணியாற்றியவர்! கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி

 

சென்னை ஏர்போர்ட்டில் பணியாற்றியவர்! கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பலியாகியுள்ளார். இவர் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வந்தவர். இவரை சேர்த்து 4 காவலர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

சென்னை ஏர்போர்ட்டில் பணியாற்றியவர்! கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி

அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ள தமிழக காவல்துறையினர் முக்கிய பங்காற்றுகிறார்கள். இரவு பகல் பாராது பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையில் 500க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் குணமடைந்த பணிக்கு திரும்பி வருகின்றனர்.

சென்னை ஏர்போர்ட்டில் பணியாற்றியவர்! கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி

இந்த நிலையில், கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்ர் ஒருவர் பலியாகியிருப்பது காவலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக எஸ்.ஐ. குருமூர்த்தி (55) பணியாற்றி வந்தார். மதுராந்தகத்தை சேர்ந்த அவர் சென்னை மேற்கு தாம்பரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

அயல்பணியாக மீனம்பாக்கம் காவல்நிலைய ரோந்து பணி பொறுப்பாளராக இருந்தபோது கொரோனா தொற்று உறுதியானது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் எஸ்.ஐ. குருமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.ஐ. குருமூர்த்தி மரணத்தை தொடர்ந்து சென்னை காவல்துறையில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.