Home தமிழகம் மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கப்படுமா? - நீதிமன்றம் நாளை தீர்ப்பு!

மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கப்படுமா? – நீதிமன்றம் நாளை தீர்ப்பு!

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாக நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கப்படுமா? - நீதிமன்றம் நாளை தீர்ப்பு!
#BREAKING முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது!

இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 16ஆம் தேதியன்று தள்ளுபடி செய்தது இதையடுத்து, மணிகண்டனை கைது செய்ய காவல் துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல் துறையினர் கடந்த 20ஆம் தேதி கைது செய்தனர்.

Former Minister Manikandan

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மணிகண்டனை வரும் 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று மீண்டும் நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மணிகண்டன் தரப்பில் நடிகையை காயப்படுத்தியதாக கூறுவதற்கும், தன்னுடன் பழகிய சில நாட்களிலேயே கர்ப்பமானார் என்று கூறுவதற்கும் ஆதாரங்கள் இல்லை என்றும், ஆரம்பகட்ட விசாரணையை முழுமையாக முடிக்காமல் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது. காவல் துறை தரப்பில் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்திற்கு ஆதாரங்களும் சாட்சிகளின் வாக்குமூலமும் இருப்பதால் ஜாமீன் வழங்க கூடாது என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, நாளை தீர்ப்பளிப்பதாகக் கூறி ஒத்திவைத்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கப்படுமா என்பது நாளை தெரியும்.

மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கப்படுமா? - நீதிமன்றம் நாளை தீர்ப்பு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம்..திருமாவளவன் முழக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்11.8.1962ல் அங்கனூரில் பிறந்தவர். இவரது பிறந்தநாளினை முன்னிட்டு தமிழக முழுவதும் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகின்றன. மேலும், பொன்விழா மாநாடும்...

இன்னும் ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வாங்கவில்லையா?… உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ!

கொரோனா நிவாரண நிதியை பெறாதவர்கள் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை...

ஒலிம்பிக்ஸில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை நிகழ்த்திய மீரா பாய்… இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிப்பூர் முதல்வர்!

சர்வதேச தொடரில் மிகவும் பிரமாண்டமான மதிப்புமிக்க தொடராக ஒலிம்பிக்ஸ் பார்க்கப்படுகிறது. எந்தவொரு நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே அவர்களின் லட்சியமாக இருக்கும். வெள்ளிப் பதக்கத்தையாவது நிச்சயம் பெற்றுவிட...

கொரோனாவால் மென்பொறியாளர் பலி; மனைவியும் மகளும் 18வது மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த மின் பொறியாளர் ரவிராஜா, மனைவி சத்யாபாய் மற்றும் ஐந்து வயது மகளுடன் மலேசியா கோலாலம்பூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். கோலாலம்பூரில் தாமான்...
- Advertisment -
TopTamilNews