`நீனா நானா?; யார் கெத்துன்னு பார்க்கலாம்!’- போட்டியால் கொல்லப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்

யார் கெத்து என்கிற போட்டியில் வீடு புகுந்து ரியல்எஸ்டேட் அதிபரை கும்பல் ஒன்று படுகொலை செய்தது. தப்பியோடிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சென்னை ஐயப்பன் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ராஜ்( 29).இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கார் ஓட்டுனராக வேலை செய்து வந்த ஸ்ரீகாந்த், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீகாந்த் அவரது நண்பர் கார்த்திக்குடன் ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீகாந்தின் தந்தை பாலசுப்பிரமணியம்(51) வீட்டிற்கு மது அருந்த சென்றுள்ளனர். அப்போது மது அருந்தி கொண்டு இருக்கும்போது பாலசுப்பிரமணியன் கடைக்கு சென்று உணவு வாங்கிவிட்டு வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார். பின்னர் உணவு வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து பார்க்கும் போது ஸ்ரீகாந்த் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

மேலும் அருகில் அமர்ந்து மது அருந்திய நண்பர் கார்த்திக் காணாமல் போயுள்ளார். இதனை அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியன் உடனடியாக கோயம்பேடு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்ரீகாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்குப் பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் ஸ்ரீகாந்துக்கும் அதே பகுதியில் வசித்து வரும் வெள்ளை மணி கும்பலுக்கும் இடையே யார் பெரியவர், யார் கெத்து, நீயா நாளா என்ற போட்டி நிலவி வந்ததாகவும், இதனால் இந்த கும்பல் ஸ்ரீகாந்தை கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது.மேலும் வெள்ளை மணி கும்பல் தலைமறைவாக இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “கொலை செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் மீது கொலை வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு நடத்தி வருகிறோம். அதில் கார்த்திக் வெளியில் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மது அருந்தும்போது என்ன தகராறு நடந்தது என்று தெரியவில்லை. மேலும் ஸ்ரீகாந்த்துக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பலுக்கும் இடையே யார் கெத்து என்ற போட்டி நிலவி வந்துள்ளது. அதனால் இந்தக் கொலைக்கும் அந்தக் கும்பலுக்கும் தொடர்புள்ளதா என்று விசாரித்துவருகிறோம்” என்று கூறினர்.

Most Popular

கோழிக்கோடு விமான நிலையத்தில் கேரள ஆளுநர் , முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு!

இடைவிடாது பெய்யும் கனமழை, நிலச்சரிவில் காணாமல் போன மக்கள் என கடந்த சில நாட்களாக துயரத்தின் உச்சத்தில் இருக்கும் கேரள மாநிலத்திற்கு மேலும் ஒரு சோக செய்தியாக வந்ததது கோழிக்கோடு விமான விபத்து. துபாயிலிருந்து...

மலையும் மழையும்தான் கேரள விமான விபத்துக்கு காரணமா?

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் 2 விமானிகள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலையும், மழையும்தான் விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்குமா என்று பேசப்படுகிறது. 191...

தொற்றிக் கொண்ட கொரோனா… உயிர் போய்விடுமோ என்று அச்சம்… உயிரை மாய்த்துக் கொண்ட உளவு பிரிவு அதிகாரி!- சென்னையில் அதிர்ச்சி

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, உயிர் போய்விடுமோ என்ற அச்சத்தில் சென்னை வருமான வரித்துறையில் உளவு பிரிவில் பணியாற்றி வந்த அதிகாரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம்...

கேரள விமான விபத்து எதிரொலி : கோழிக்கோடு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. 190 பேர் பயணித்த இந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள்,...