சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் ஜெயந்தி திடீர் விடுப்பில் சென்றதால் பரபரப்பு

 

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் ஜெயந்தி திடீர் விடுப்பில் சென்றதால் பரபரப்பு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் ஜெயந்தி திடீர் விடுப்பில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், முதுநிலை மாணவர்கள் என்று 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர்கள் எல்லோரும்  அயனாவரம் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் ஜெயந்திக்கு பதிலாக சென்னை மருத்துவக் கல்லூரி ஹெபடாலஜி பிரிவு இயக்குனரும், பேராசிரியருமான நாராயணசாமி டீன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

முன்னாள் டீன் ஜெயந்தி தற்போது மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். திடீரென அவர் விடுப்பில் சென்றுள்ளதால் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்க வாய்ப்பிருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக அவர் விடுப்பில் செல்லவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் டீன்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.