Home விளையாட்டு கிரிக்கெட் சென்னை சிங்கமா... ராஜஸ்தான் சிங்கமா? வெற்றி யாருக்கு? #IPL #CSKvsRR

சென்னை சிங்கமா… ராஜஸ்தான் சிங்கமா? வெற்றி யாருக்கு? #IPL #CSKvsRR

ஐபிஎல் 2020 – தொடரின் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புடன் செல்கிறது.  முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை ராயுடுவின் அதிரடி ஆட்டத்தால் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

டெல்லி கேபிட்டல்ஸூம் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதிய இரண்டாம் போட்டி இன்னும் பரபரப்பானது. இரு அணிகளின் ஸ்கோரும் சமனாக சூப்பர் ஓவரில் டெல்லி வென்றது.

நேற்று ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொண்டது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.  டி வில்லியர்ஸ் பேட்டிங், சோஹலின் பவுலிங்கால் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு மோதுகிறது ராஜஸ்தான் ராயல் அணி. இரண்டு அணிகளின் சின்னங்களிலும் சிங்கம் இருக்கிறது. ஆக, எந்தச் சிங்கம் இன்று வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது என்று பார்ப்போம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் டீமின் கேப்டன் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். இந்த அணியின் முதல் கேப்டன் ஷேர்ன் வார்னே. 2008 –ல் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் யாருமே எதிராவண்ணம் கோப்பையைத் தட்டிச் சென்றது இந்த அணி. ஆனால், 2008  ஐபிஎல் தொடருக்குப் பிறகு கோப்பை நெருங்கிக்கூட வரவில்லை என்பதே உண்மை.

தற்போதைய அணியில், ஸ்டீவ் ஸ்மித், ராபின் உத்தப்பா, ஜோஸ் பட்லர்,பென் ஸ்டோக்ஸ், ரியான் ப்ராக் உள்ளிட்டோர் பேட்டிங்கில் ஜொளிப்பார்கள். ஆனால், கொரோனா தனிமை காலத்தில் இருப்பதால் பென் ஸ்டோக்ஸ் இன்றைய ஆட்டத்தில் ஆட வில்லை. இது பெரும் பின்னடைவு. பவுலிங்கில் டாம் கருண், ஜோப்ரா ஆர்ச்சர் இருவருமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்.  

சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றியை ருசித்த களிப்பில் இரண்டாம் ஆட்டத்தை எதிர்கொள்ள விருக்கிறது.

பேட்டிங்கில் அம்பதி ராயுடு செம ஃபார்மில் இருக்கிறார். டூ பிளஸிஸ், ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, முரளி விஜய், அதிரடி சாம் கரண் என பெரிய பட்டியலே இருக்கிறது. பவுலிங்கிலும் இம்ரான் தாஹிர், சாம் கரண், லுங்கி நிகிடி, பியூஷ் சாவ்லா என வலுவான வீரர்கள் இருக்கிறார்கள்

இரண்டு அணிகளின் பலத்தை ஒப்பிடுகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னணியில் இருக்கிறது. வெற்றி வாய்ப்பும் அதிகம் சிஎஸ்கேவுக்கே. ஆனால், எதிர்பாராததை எதிர்பாருங்கள் அதுதாமே டி20 போட்டிகள் அதுவும் ஐபிஎல் போட்டிகளின் முடிவுகள். அப்படி ஏதேனும் ஒரு மேஜிக் நடந்தால் மட்டுமே ராஜஸ்தான் சிங்கம் உறும முடியும். இப்போதைய நிலையில் சென்னை சிங்கம் கர்ஜிக்கவே வாய்ப்பு இருக்கிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

முதல்வர் பழனிசாமி மிலாடி நபி வாழ்த்து!

மிலாடி நபியை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை : சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் !

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நீடிக்கும்...

“அந்தரங்க விஷயங்களை ஆன்லைனில் பகிர்ந்த பெண் ” -பதிவு செய்த வாலிபர் ப்ளாக் மெயில் செய்யும் கொடுமை

ஒரு கல்லூரி மாணவி ஆன்லைனில் பழகிய ஒரு வாலிபரிடம் தன்னுடைய பல அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொண்டதால் ,இப்போது அந்த வாலிபரால் தினம் தினம்...

’வேல்முருகன் பாடும்போதெல்லாம் டான்ஸ் ஆடணுமா… ஆத்தாடி!’ – பிக்பாஸ் 24-ம் நாள்

பஞ்சாயத்துக்கு பஞ்சம் இல்லாதது பிக்பாஸ் வீடு. மேலும், பல விசித்திரங்களும் நிறைந்தது. கல்யாணம் அல்லது பெரிய விசேஷத்திற்கான மனநிலையோடு நூறுநாளும் இருக்க வேண்டும். அதுவே ஒருநாளில் சலித்துபோய்விடும். அந்தச் சலிப்பை...
Do NOT follow this link or you will be banned from the site!