‘ரூட்டு தல’ பிரச்னையில் ஈடுபட்டால் நடவடிக்கை : கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

‘ரூட்டு தல’ பிரச்னையில் ஈடுபட்டால் நடவடிக்கை : கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் சூழலில் 7ம் தேதி (நாளை) இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, நாளை கல்லூரிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பல மாதங்களுக்கு பிறகு நாளை கல்லூரிகள் திறக்கப்படுவதால், மாணவர்கள் பேருந்துகளில் ரூட்டு தல பிரச்னைகளில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

‘ரூட்டு தல’ பிரச்னையில் ஈடுபட்டால் நடவடிக்கை : கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

இந்த நிலையில், சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, பல மாதங்கள் பிறகு கல்லூரிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வது, தொங்கிக் கொண்டு செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் செயல்படக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

‘ரூட்டு தல’ பிரச்னையில் ஈடுபட்டால் நடவடிக்கை : கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

மேலும், மாணவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரூட்டு தல உள்ளிட்ட பிரச்னைகளில் ஈடுபட்டால் அந்த மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாணவர்களுக்கு கல்லூரிகள் அறிவுரை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.