• February
    19
    Wednesday

Main Area

Main



ரூ.540 வழிபறி செய்த நபரை சிறையில் அடைத்த சென்னை போலீஸ்!

arrested
arrested

கோயம்பேட்டில் வழிபறியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
ராமநாதபுரம் கமுதியைச் சேர்ந்தவர் போஸ் (69). இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் தண்ணீர் டம்ளர் விற்பனை செய்து வருகிறார்.

knife

சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் டாஸ்மாக் பாருக்கு அருகே டம்ளர் விற்றுக்கொண்டிருந்த, போசிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பாக்கெட்டில் இருந்த ரூ.540 ரூபாயைப் பறித்துச் சென்றார். இது குறித்து போஸ் கோயம்பேடு சி.எம்.பி.டி போலீசில் புகார் செய்தார். 
போஸ் புகார் அடிப்படையில் வழிபறியில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடிவந்தனர். 

cmbt

இந்த நிலையில் மீண்டும் அதே பார் அருகே அந்த மர்ம நபர் வந்துள்ளார். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து அந்த நபரை பிடித்துச் சென்றனர். விசாரணையில் அவர் வியாசர்பாடி கென்னடி தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (31) என்பது தெரியவந்தது. 
இதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, புழல் சிறையில் அடைத்தனர். வேறு யாரிடம் எல்லாம் வழிபறியில் ஈடுபட்டார் என்று விசாரித்து வருகின்றனர். ரூ.540தான் என்றாலும் திருட்டில் ஈடுபட்ட நபரை பிடித்து சிறையில் அடைத்த போலீசை குடி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
 

2018 TopTamilNews. All rights reserved.