`சகோதரத்துவம், மாண்பை வலுப்படுத்துங்கள் !’-காவலர்களுக்கு, ஏ.கே.விஸ்வநாதன் உருக்கமான வேண்டுகோள்

சென்னை பெருநகர காவல்துறையின் மாண்பினை மேலும் வலுப்படுத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அனைத்து காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உருக்கமான வேண்டுகோள் வைத்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் அண்மையில் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தான் பணி புரிந்து காலத்தில் பணியாற்றிய அனைத்து காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அவர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளளார். அதில், “என் அன்பிற்குரிய காவல் ஆளினர்களே மற்றும் அதிகாரிகளே வணக்கம். கடந்த 3 ஆண்டுகளாக சென்னை பெருநகர காவல்துறையினருடைய சிறப்பான பங்களிப்பு மூலம் சென்னை பொதுமக்கள் மீது ஒரு மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அதற்கு காவல் ஆளினர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் தங்களுடைய உழைப்பையும், திறமையையும் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தியுள்ளீர்கள். குறிப்பாக சிசிடிவி உள்ளிட்ட பல தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியதன் மூலம் இந்தியாவிலேயே சென்னையை பாதுகாப்பான நகரமாக உருவாக்கியதற்கு நீங்கள் சிந்திய வியர்வையை நான் இன்று நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன்.

நம்மை நாடு வருகின்றன மனுதாரர்களை, மற்றவர்கள் எவ்வாறு நம்மை நடத்த வேண்டுமென எதிர்பார்க்கிறோமோ அதுபோன்றே நாமும் மற்றவர்களை நடத்த வேண்டுமென்ற அறிவுரைக்கிணங்க நீங்கள் ஒவ்வொருவரும் நடந்து கொண்ட விதத்தால் காவல்துறைக்கு பொதுமக்களிடமிருந்த அன்பும், நன்மதிப்பும் பன்மடங்கு பெருகியுள்ளது என்பதை நாம் அறிவோம்.

தீபாவளி, பொங்கல் விழா மற்றும் சர்வதேச மகளிர் தினம் போன்ற விழாக்களை காவலர் குடும்பத்துடன் கொண்டாடிய நாட்கள் என்றென்றும் என் மனதில் நிலைத்து நிற்கும். சவாலான பல்வேறு சூழ்நிலையிலும், கொரோனா காலத்திலும் நீங்கள் முன் வரிசையில் நின்று சிறப்பாக பணியாற்றியிருக்கிறீர்கள். அதற்கு உங்கள் குடும்பத்தினர் உற்ற துணையாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு என நன்றியையும், பாராட்டுகளையும் உரித்தாக்குகிறேன். நான் விடைபெறும் நேரத்தில் மீண்டும் உங்களை அதே பொறுப்புணர்வுடனும், கடமையுணர்வுடனும், சகோதரத்துவத்துடனும் மக்களை அணுக வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, சென்னை பெருநகர காவல்துறையின் மாண்பினை மேலும் வலுப்படுத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Most Popular

இதுவரை உலகளவில் 1.86 கோடி பேருக்கு கொரோனா!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால்...

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை இதுவரை உலகம் முழுவதும்...

ஆசைவார்த்தை… 9 மாதமாக உல்லாசம்… கர்ப்பமான 13 வயது சிறுமி!- போக்ஸோவில் சிக்கிய இளைஞர்

ஆசைவார்த்தை காட்டி 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் போக்ஸோவில் கைது செய்தனர். மயிலாடுதுறை அருகே திருவெண்காடு பஞ்சந்தாங்கி தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் அருண் (26). டைல்ஸ் வேலை பார்த்து...

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை...