• February
    17
    Monday

Main Area

Main



சிஏஏ போராட்டத்தில் முதியவர் ஒருவர் இறந்துவிட்டாரா? சென்னை போலீசாரின் டிவிட்டர் பதிவு!

சிஏஏ போராட்டம்
சிஏஏ போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக அவர்கள்  போராட்டம் நடத்தியதால் போலீசார் அவர்களை கலைந்து  செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.  இதனால் போலீசார் , மற்றும் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடந்தது. இதில் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதை கண்டித்து பெண்கள் உள்பட பலரும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

 

போராட்டம்

இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த  சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நடத்திய பேச்சுவார்த்தையில் கைதானவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டது.  எனினும், காவல்துறையினரின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தொடர்ந்து இஸ்லாமியர்கள் நள்ளிரவைத் தாண்டியும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் பிராட்வே, திருவல்லிக்கேணி, பாரிமுனை, கிண்டி, ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட  இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில்  வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.  இதுகுறித்து சென்னை போலீசார் தங்கள்  டிவிட்டர் பக்கத்தில், இந்தப் பெரியவர் இறந்ததற்கும், CAA போராட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.  சிலர் தவறுதலாக வேண்டுமென்றே பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். யாரும் இறக்கவில்லை. எச்சரிக்கை தேவை. இறந்துவிட்டார் என்ற பொய் தகவலை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம்' என்று  பதிவிட்டுள்ளனர். 

2018 TopTamilNews. All rights reserved.