சிசிடிவி கேமரா கண்காணிப்பில் தலைசிறந்த நகரங்களின் பட்டியல்’.. டெல்லியை முந்தியது சென்னை!

 

சிசிடிவி கேமரா கண்காணிப்பில் தலைசிறந்த நகரங்களின் பட்டியல்’.. டெல்லியை முந்தியது சென்னை!

இந்தியாவில் பல குற்ற சம்பவங்கள் நடந்து வருவதால் சிசிடிவி கேமராக்களின் புழக்கம் அதிகரித்தது. நீதிமன்றத்திலேயே சிசிடிவி சாட்சியாக ஏற்கப்படுவதால் தற்போது நாடு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அதிகமாக பொருத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னையில் மக்கள் தொகை அதிகமாதலால், அதனை கட்டுப்படுத்த காவல் ஆணையராக இருந்த ஏ.கே விஸ்வநாதன் சிசிடிவி பொருத்துவதை முன்னெடுத்தார். அவரது வழிகாட்டுதலின் படி சென்னையில் முக்கிய இடங்களான திநகர், அண்ணாநகர், கோடம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அவரது இந்த முயற்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

சிசிடிவி கேமரா கண்காணிப்பில் தலைசிறந்த நகரங்களின் பட்டியல்’.. டெல்லியை முந்தியது சென்னை!

இதனைத் தொடர்ந்து தற்போது வீடுகளில் கூட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவும் சிசிடிவி மற்றும் ட்ரோன் கேமராக்களின் புழக்கத்தை அதிகரித்தது. இந்த நிலையில் சிசிடிவி கண்காணிப்பில் உலகின் சிறந்த 50 நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் டெல்லியை சென்னை முந்தியடித்துள்ளது.