தளர்வற்ற ஊரடங்கு : சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு!

தளர்வற்ற ஊரடங்கு : சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,713 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

தளர்வற்ற ஊரடங்கு : சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு!

23பேர் தனியார் மருத்துவமனையிலும், 45 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,025ஆக அதிகரித்துள்ளது.  இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 51,699பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தளர்வற்ற ஊரடங்கு : சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு!

இந்நிலையில் தளர்வற்ற ஊரடங்கு தினமான இன்று சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன. எல்லை பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் யாரும் உள்ளே, வெளியேதளர்வற்ற ஊரடங்கு செல்ல முடியாதபடி இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அனுமதி அளிக்கப்பட்ட காய்கறி, மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் இயங்க இன்று ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், 500க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தேவையின்றி வெளியில் நடந்து செல்லும் பொதுமக்களை எச்சரித்த போலீசார், வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர். கொரோனா அதிகம் பாதித்த ராயபுரம், தண்டையார்பேட்டை திருவிக நகர் உள்ளிட்ட மண்டலங்களில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.