‘கொரோனா வார்டாக மாறும் நேரு ஸ்டேடியம்’.. சென்னை கொரோனா பதிப்பின் எதிரொலி!

 

‘கொரோனா வார்டாக மாறும் நேரு ஸ்டேடியம்’.. சென்னை கொரோனா பதிப்பின் எதிரொலி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனை தடுக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, நேற்று மட்டும் 759 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக சென்னையில் மட்டுமே நேற்று 624 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

‘கொரோனா வார்டாக மாறும் நேரு ஸ்டேடியம்’.. சென்னை கொரோனா பதிப்பின் எதிரொலி!

இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்கனவே சென்னை சென்னை வர்த்தக மையத்தை கொரோனா வார்டாக மாற்றியதை போல தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கத்தையும் கொரோனா வார்டாக மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அதிவேகமாக கொரோனா பரவி வரும் நிலையில், முதல்நிலை கொரோனா பாசிட்டிவ் இருப்பவர்கள் மட்டும் அங்கு தங்க வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.