சென்னை மவுண்ட் ரோடு அண்ணா சாலை தர்கா மேல் கூரை, இடிந்து நாசம்!

சென்னை மவுண்ட் ரோடு அண்ணா சாலை தர்கா மேல் கூரை, இடிந்து நாசம்!

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை அண்ணாசாலையில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வங்கக் கடலில் மையம் கொண்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது நிவர் புயலாக வலுப்பெற்றுள்ளது.

சென்னை மவுண்ட் ரோடு அண்ணா சாலை தர்கா மேல் கூரை, இடிந்து நாசம்!

இந்த புயலானது இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. நிவர் புயல் கரையை கடக்கும்போது 110 முதல் 145 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இன்று பொது விடுமுறை அளித்துள்ளது.

சென்னை மவுண்ட் ரோடு அண்ணா சாலை தர்கா மேல் கூரை, இடிந்து நாசம்!

சென்னையில் பல பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படுகின்றனர்.

சென்னை மவுண்ட் ரோடு அண்ணா சாலை தர்கா மேல் கூரை, இடிந்து நாசம்!

இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் மழை வெள்ளம் ஆறுபோல் காட்சியளிக்கிறது. இதன் எதிரொலியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவின் மேல் கூரை இடிந்து விழுந்து தர்கா சேதமடைந்துள்ளது. அத்துடன் அங்கு பலத்த காற்று வீசி வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சாலைகளில் பள்ளம் விழ தொடங்கியுள்ளன.