சென்னையில் மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணியில் இருந்தே தொடக்கம்!

 

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணியில் இருந்தே தொடக்கம்!

சென்னையில் மெட்ரோ சேவை காலை 7 மணியில் இருந்தே ஆரம்பமாகும் என அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வரும் 7 ஆம் தேதி முதல் மீண்டும் மெட்ரோ சேவைகள் இயங்க உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். வேலைக்கு செல்லும் மக்களின் நலனுக்காகவே மெட்ரோ மீண்டும் இயக்கப்படுவதால், காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என் அறிவிக்கப்பட்டது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணியில் இருந்தே தொடக்கம்!

அதாவது அலுவலக நேரமான காலை 8.30 முதல் 10.30 வரையும் மாலை 5 முதல் 8 வரையிலும் 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் அலுவலகம் இல்லாத நேரத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது. மேலும், 7 ஆம் தேதி முதல் சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை இடையே ரயில்கள் இயக்கப்படும் என்றும் 9 ஆம் தேதி முதல் பரங்கிமலையில் இருந்து சென்ட்ரல் வரை ரயில்கள் இயக்கப்படும் எனவும் கூறியிருந்தது. இதனிடையே மெட்ரோ ரயில்களின் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மெட்ரோ ரயில்களில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என மெட்ரோ மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். செல்போன் மூலமாகவும் பயணிகள் மெட்ரோ டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சென்னையில் தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரயில் சேவை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் என அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.