மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்..’வெயில் கடுமையாக இருக்கும்’ – சென்னை வானிலை ஆய்வு மையம்

மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்..’வெயில் கடுமையாக இருக்கும்’ – சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் மிகக்கடும் புயலாக மாயிருந்த ஆம்பன் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த புயலால் மேற்கு வங்கத்தின் 6 மாவட்டங்கள், ஒடிசா அதிக பாதிப்பை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இந்த புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நேற்று மாலை கரையைக் கடந்தது. ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் அதிகரித்து ஒடிசாவின் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்..’வெயில் கடுமையாக இருக்கும்’ – சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்த புயல் கரையை கடக்கும் போது, வங்கக் கடல், அரபிக் கடல் பகுதியில் உள்ள ஈரப்பதத்தையும் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிக் கொள்ளும் என்பதால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்..’வெயில் கடுமையாக இருக்கும்’ – சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில், சென்னை மற்றும் வட மாவட்டங்கள் இன்றும், நாளையும் அதிகபட்ச வெயில் இருக்கும் என்றும் மக்கள் மதிய வேளையில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் 30- 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது.