சென்னை – மதுரை தேஜஸ் ரயிலின் நேரம் மாற்றம்

 

சென்னை – மதுரை தேஜஸ் ரயிலின் நேரம் மாற்றம்

04.12.2020 முதல் சென்னை – மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் சென்னையிலிருந்து புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “வண்டி எண் 02613 சென்னை – மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து தற்போதைய காலை 06.30 மணிக்கு பதிலாக காலை 06.00 மணிக்கே புறப்பட்டு, திருச்சியில் இருந்து 10 மணிக்கும், கொடைக்கானல் ரோட்டில் இருந்து 11.20 மணிக்கும் புறப்பட்டு நண்பகல் 12.20 மணிக்கு மதுரை வந்து சேரும்.

சென்னை – மதுரை தேஜஸ் ரயிலின் நேரம் மாற்றம்

மறுமார்க்கத்தில் 04.12.2020 முதல் வண்டி எண் 02614 மதுரை சென்னை தேஜஸ் சிறப்பு ரயில் தற்போதைய மாலை 03.15 மணிக்கு பதிலாக மாலை 03.00 மணிக்கே புறப்பட்டு, கொடைக்கானல் ரோட்டில் இருந்து மாலை 03.30 மணிக்கும், திருச்சியிலிருந்து மாலை 05.05 மணிக்கும் புறப்பட்டு இரவு 09.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் திருச்சி மற்றும் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.