பயணிகள் ரயில் சேவைக்கும் அரசு அனுமதி; இயக்கப்படுமா சென்னை புறநகர் ரயில்கள்?!

 

பயணிகள் ரயில் சேவைக்கும் அரசு அனுமதி; இயக்கப்படுமா சென்னை புறநகர் ரயில்கள்?!

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பயணிகள் ரயில் சேவைக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் சென்னை புறநகர் ரயில் சேவை இயக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததால், அதனை கட்டுப்படுத்த பொதுப்போக்குவரத்து சேவை உட்பட அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன் படி கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இடையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்காக மட்டும் ஒரு சில இடங்களில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டன.

பயணிகள் ரயில் சேவைக்கும் அரசு அனுமதி; இயக்கப்படுமா சென்னை புறநகர் ரயில்கள்?!

அதே போல ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அவசரத் தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. அதன் பிறகு, அரசு அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் பொதுப்போக்குவரத்து இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்காக, அரசு மாவட்டங்களுக்குள்ளேயே பேருந்தை இயக்க அனுமதி அளித்தது. இதனைத்தொடர்ந்து தற்போது, 7 ஆம் தேதி முதல் ஒரு மாவட்டம் விட்டு பிற மாவட்டங்கள் செல்ல பேருந்துகளை அனுமதிப்பதாகவும் பயணிகள் ரயில் சேவையை அனுமதிப்பதாகவும் அரசு அறிவித்திருக்கிறது.

பயணிகள் ரயில் சேவைக்கும் அரசு அனுமதி; இயக்கப்படுமா சென்னை புறநகர் ரயில்கள்?!

அதனால், ரயில் சேவைக்கு அனுமதி அளித்த அரசு சென்னை புறநகர் ரயில் சேவைக்கு அனுமதி அளிக்குமா என கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில் சேவை குறித்த விவரங்கள் விளக்கப்படவில்லை, இது தொடர்பான அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.