darbar
  • January
    23
    Thursday

Main Area

Mainதெரிந்த இடங்கள்...தெரியாத விபரங்கள்... ஆச்சரியப்படுத்தும் சென்னை!

சென்னை
சென்னை

1) இந்திய நகரங்களிலேயே முதல் உலகப் போரில் தாக்குதலை சந்தித்த ஒரே நகரம் சென்னைதான்.ஜெர்மானிய போர்கப்பலான எம்டன் 1914 செப்டம்பர் 22-ம் தேதி இரவு சென்னை துறைமுகம் பகுதியில் குண்டு வீசியது.பெரிய சேதமேதும் இல்லாவிட்டாலும் பிரிட்டிஷ் பெருமையை தரைமட்டமாக்கிவிட்டது எம்டன்.

சென்னை துறைமுகம்

2) ராயபுரம் ரயில் நிலையம் 1856 ஜூலை மாதம் முதல்தேதி முதல் இன்றுவரை இயங்கிக்கொண்டிருக்கிறது.இந்தியாவிலேயே பழைமையான ரயில் நிலையம் இதுதான்.1873-ல் இன்றைய எம்.ஜி.ஆர் சென்டிரல் ஸ்டேஷன் திறக்கப்படும் வரை சென்னையில் இருந்த ஒரே ரயில் நிலையம் ராயபுரம் மட்டும்தான். சென்டிரல் ஸ்டேஷனை விட ராயபுரம் ரயில் நிலையம் 17 ஆண்டுகள் மூத்தது.

ராயபுரம் ரயில் நிலையம்

3) கன்னிமாரா நூலகம்,இது வெறும் நூலகமல்ல நேஷனல் டிபோசிடரி. இந்தியாவில் இயங்கும் நான்கு டிபோசிடரிகளில் இது ஒன்று.இந்தியாவில் பிரசுரமாகும் புத்தகங்கள் பத்திரிகைகள்,செய்திதாள்கள் அனைத்தும் இங்கே அனுப்பி வைக்கபடுவது கட்டாயம்.இது ஐக்கிய நாடுகள் சபையின் நூலகமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கன்னிமாரா நூலகம்

4) அடையாறு ஆலமரம். 450 ஆண்டுகளாக இந்த ஆலமரம் நின்றுகொண்டு இருக்கிறது.நூற்றுக்கணக்கான புயல்கள் தாக்கியும் இதை முற்றாக அழிக்க முடியவில்லை.சென்னை தியாசஃபிக்கல் சொசைட்டி வளாகத்தில் இருக்கும் இந்த மரம் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பரவி நிற்கிறது.இதன் நிழலில் ஒருமுறையாவது இளைப்பாராத இந்தியத் தலைவர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம்

அடையாறு ஆலமரம்

5) சென்னை மாநகராட்சி.இதுதான் உலகின் இரண்டாவது பழைமையான முனிசிபல் கார்ப்பரேஷன் ( முதலிடம் லண்டனுக்கு).1687 டிசம்பர் 30ம் தேதி அன்றைய பிரிட்டிஷ் அரசர் இரண்டாவது ஜேம்ஸ் வெளியிட்ட உத்தரவின்படி 1688 செப்டம்பர் 29 ம்தேதி சென்னை கார்பரேஷன் தோற்றுவிக்கப்பட்டது. அதாவது 330 வயதாகிறது சென்னை மாநகராட்சிக்கு.

சென்னை மாநகராட்சி

6) உலகிலேயே சிறந்த உணவு வழங்கும் இரண்டவது நகரமாக சென்னையை தேர்ந்தெடுத்திருக்கிறது,நேஷனல் ஜியாகிரபிக் சேனல்.அந்தப்  பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய நகரமும் சென்னைதான்.லோன்லி ப்ளானட் வெளியிட்ட உலகின் சிறந்த காஸ்மோபாலிட்டன் நகரங்களில் 9 இடத்தை பிடித்திருக்கிறது சென்னை.

சென்னை அண்ணா சாலை

7) அடையாறு புற்றுநோய் மருத்துவமனை.இதுதான் இந்தியாவின் முதல் புற்றுநோய் மருத்துவமனை.இதை உருவாக்கிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிதான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்.இங்கே உருவான (WIA) கேன்சர் இன்ஸ்டிட்யூட் புற்றுநோய் தொடர்பான பல துறைகளில் பயிற்சி அளிக்கிறது.அந்த சான்றிதழ்கள் இந்திய மெடிக்கல் கவுன்சில் அங்கீகாரம் பெற்றவை.

கேன்ஸர் இன்ஸ்ட்யூட்

8) அறிஞர் அண்ணா வனவிலங்கு காப்பகம். இப்போது சென்னை வண்டலூரில் இயங்கும் இந்த காப்பகம் துவங்கப்பட்ட ஆண்டு 1855 ! இந்தியாவின் முதல் வனவிலங்கு காட்சியகம் இதுதான்.துவக்கத்தில் இன்றைய் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தின் அருகில் துவங்கப்பட்டு 1985 வாக்கில் இப்போது இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது.இது விலங்குகளுக்கான சரனாலயமாகவும்,புத்துணர்வு மையமாகவும் செயல்படுகிறது.

வண்டலூர் மிருகக்காட்சி

9) கத்திப்பாரா மேம்பாலம்.க்ளோவர் லீஃப் என்கிற வகையைச் சேர்ந்த மேம்பாலங்களில்  ஆசியாவிலேயே பெரிய மேம்பாலம் இதுதான்.ஆலந்தூர் சந்திப்பில் அமைந்திருக்கும் இந்தபாலம்  ஜி.எஸ்.டி ரோடு,அண்ணா சாலை,உள்வட்டச்சாலை,மவுண்ட் பூந்தமல்லி சாலை ஆகிய நான்கு சாலைகளை இணைக்கிறது.

கத்திப்பாரா நூலகம்

10) மெட்ராஸ் ஹைகோர்ட்

உலகின் பெரிய நீதிமன்ற வளாகங்களில் ஒன்று.இதன் பரப்பளவு 107 ஏக்கர்.அதாவது 42 லட்சத்து 80 ஆயிரம் சதுர அடி.இங்கிலாந்து ராணி விக்டோரியாவின் அறிவிப்பின்படி,1862 ஜூன் 28-ம் தேதி பிறந்தது சென்னை உயர் நீதிமன்றம்.இதன் பிரதானக் கட்டிடத்தின் உச்சியில்தான் சென்னையின் இரண்டாவது கலங்கரை விளக்கு அமைக்கபட்டு இருந்தது என்பது இன்னொரு உபரி பெருமை.

சென்னை உயர் நீதிமன்றம்

 


 

2018 TopTamilNews. All rights reserved.