ஆயுள் கைதியாக சிறையில் இருப்பவரை திருமணம் செய்துகொள்ள எந்த பெண்ணும் முன்வர மாட்டார்கள்: உயர்நீதிமன்றம்

 

ஆயுள் கைதியாக சிறையில் இருப்பவரை திருமணம் செய்துகொள்ள எந்த பெண்ணும் முன்வர மாட்டார்கள்: உயர்நீதிமன்றம்

ஆயுள் கைதிகளை மணக்கும் பெண்களின் முடிவு சுய விருப்பத்திலா அல்லது கட்டயத்தினாலா என கண்டறிவதற்கான நடைமுறையை உருவாக்க தேசிய & மாநில மகளிர் ஆணையங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஆயுள் தண்டனை கைதியாக உள்ள கணவருக்கு பரோல் கோரி தொடரப்பட்ட வழக்குகளை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அமர்வு விசாரித்தது. அப்போது பரோலில் வந்து திருமணம் முடித்து மீண்டும் சிறைக்கு செல்லும் நிலையில், பெண்களின் மன உளைச்சல் மற்றும் உள்ளாகும் சிரமம் குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். ஆயுள் தண்டனை கைதிகளை திருமணம் செய்து கொள்ளும்படி பெண்கள் நிர்பந்திக்கப்படுகின்றனரா அல்லது சுய விருப்பத்தின் பேரில் திருமணங்கள் நடைபெறுகிறதா என கேள்வி எழுப்பினர். திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளும் காரணத்தை கண்டறிய பெண்கள் ஆணையங்கள் நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

ஆயுள் கைதியாக சிறையில் இருப்பவரை திருமணம் செய்துகொள்ள எந்த பெண்ணும் முன்வர மாட்டார்கள்: உயர்நீதிமன்றம்

சாதாரண ஆண்களை மணமுடிக்கவே தற்போதைய நிலையில் பெண்கள் பல நிபந்தனைகள் விதிக்கும்போது, ஆயுள் கைதியாக சிறையில் இருப்பவரை மணமுடிக்க எந்த பெண்ணும் முன்வர மாட்டார்கள் என்றும், ஒரு குற்றவாளியை மணம் முடிக்கிறாள் என்ற அவப்பெயரை சுமப்பது மட்டுமல்லாமல், அந்த பெண்ணின் வாழ்க்கை முடங்கி போகிறது என்றும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். இதனால் கைதியை மணமுடிக்கும் பெண் உளவியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், மணமான ஒரு பெண்ணிற்கு கணவனின் துணை வாழ்க்கை முழுவதும் தேவை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.