Home தமிழகம் தேசிய கொடி அவமதிப்பு வழக்கு: பழிவாங்கும் நோக்கில் தன் மீது வழக்கு: எஸ்.வி. சேகர்

தேசிய கொடி அவமதிப்பு வழக்கு: பழிவாங்கும் நோக்கில் தன் மீது வழக்கு: எஸ்.வி. சேகர்

தேசிய கொடியை அவமதித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவுக்கு ஆகஸ்ட் 28ம் தேதி விளக்கமளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்ற பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர்.

எஸ் வி சேகர்

இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்து முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் வகையிலேயே தேசிய கொடியில் காவி மற்றும் பச்சை நிறம் இடம்பெற்றுள்ளதாக காந்தியடிகள் கூறியிருந்த கருத்தையே தான் தெரித்ததாக எஸ்.வி.சேகர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த காவல்துறை தரப்பு, இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதற்கு முன்னர் காந்தியடிகள் இந்த கருத்தை தெரிவித்ததாகவும், அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பின்னர், தேசிய கொடியின் வண்ணங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மதரீதியான கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் எஸ்.வி.சேகர் தற்போது கருத்து தெரிவித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், தேசிய கொடியை அவமதித்ததால் ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்ப்பிரிவின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்த காவல்துறை, இன்று காலை விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவில் எஸ்.வி.சேகர் ஆஜராகியுள்ளதாகவும், இன்று நடத்தப்பட்ட விசாரணை நிறைவடையாததால் அவர் மீண்டும் வரும் 28 ஆம் தேதி ஆஜராக எஸ்.வி.சேகருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, எஸ்.வி.சேகர் தரப்பில், சுதந்திர தினத்தன்று அறிவாலயத்தில் ஸ்டாலின் கொடி ஏற்றியபோது, தேசிய கொடிக்கு உரிய மரியாதை கொடுக்காமல் இருந்ததாக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, பழிவாங்கும் நோக்கில் தன் மீது மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளதால், அடுத்த விசாரணை வரை தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. விசாரணையின் போது எஸ்.வி.சேகர் கொடுக்கும் விளக்கத்தை பொருத்தே அவரை கைது செய்வது குறித்து முடிவெடுக்க முடியும் எனவும், இடையில் ஏதேனும் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Most Popular

பஞ்சாபில் தீவிரமாகும் போராட்டம்.. ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நாளை தொடங்குகிறது…

பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ராகுல் காந்தி தலைமையில் நாளை முதல் 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணியை காங்கிரசார் நடத்த உள்ளனர்.

பீகாரில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ஜ.க.வின் பிரபல தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை…

பீகாரில் பா.ஜ.க.வின் பிரபல தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பா.ஜ.க.வில் பிரபலமான தலைவர் ராஜேஷ் ஜா. பாட்னாவில்...

என் தாத்தா மேல பழி போடாதீங்க… காங்கிரஸை எச்சரித்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பேரன்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பு காங்கிரஸின் முகத்தில் அறைந்தது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மீது குற்றம் சாட்டுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என அவரது...

தலித் பெண் என்பதால் ஹத்ராஸ் சம்பவத்துக்கு நடுத்தர வர்த்தகத்தினர் குரல் கொடுக்கவில்லை?.. திக்விஜய சிங்

நிர்பயா பாலியல் பலாத்காரம் பிரச்சினையை எழுப்பிய அளவுக்கு ஹத்ராஸ் சம்பவத்துக்கு நடுத்தர வர்த்தகத்தினர் குரல் எழுப்பவில்லை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.
Do NOT follow this link or you will be banned from the site!