மோசமான நெடுஞ்சாலைப் பராமரிப்பைச் சரிசெய்யும் வரை 50% மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க உத்தரவு

 

மோசமான நெடுஞ்சாலைப் பராமரிப்பைச் சரிசெய்யும் வரை 50% மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க உத்தரவு

சென்னையை அடுத்த மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற கடிதத்தின் அடிப்படையில், நொளம்பூர் மழை நீர் கால்வாயில் விழுந்து தாய் மகள் உயிரிழந்தது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்து விசாரணை நடத்தியது. அப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போடும் சாலைகள் அனைத்தும் தேசிய சாலை தரமானதாக இல்லை என்றும், பழுதடைந்த நிலையில் உள்ள மதுரவாயல்- வாலாஜா நெடுஞ்சாலை பல நாட்களாக ஏன் சரி செய்யவில்லை..? என்றும் கேள்வி எழுப்பியது. அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் 10 நாட்களில் பழுது பார்க்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

மோசமான நெடுஞ்சாலைப் பராமரிப்பைச் சரிசெய்யும் வரை 50% மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க உத்தரவு

இதனை கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், சாலையை சரிசெய்யும் வரை 2 வாரத்துக்கு மதுரவாயல்- வாலாஜா நெடுஞ்சாலைக்கு இடையே உள்ள 2 சுங்கச்சாவடியில் 50 சதவீத டோல் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் மட்டும் ஆண்டுக்கு 500க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடைபெறுகிறது என்றும், சாலை விபத்து வழக்குகளில் இனி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மாநில நெடுஞ்சாலை துறையையும் சேர்க்க வேண்டும் என்றும் கூறி வழக்கு விசாரணையை டிசம்பர் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மோசமான நெடுஞ்சாலைப் பராமரிப்பைச் சரிசெய்யும் வரை 50% மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க உத்தரவு

மதுரவாயல்-வாலாஜா இடையிலான மோசமான நெடுஞ்சாலையை பராமரிக்கும் வரை 50% மட்டுமே சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டுமென தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக சென்னை அயனம்பாக்கத்தில் வசித்து வந்த பிரிசில்லா(50), தனது மகள் ஈவாலின்(20) உடன் மதுரவாயிலில் இருந்து அயனம்பாக்கத்திற்கு கடந்த 6 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மதுரவாயல் பைபாஸ் சாலையில் செல்லும் போது, அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் நிலை தடுமாறி அப்பகுதியில் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்தது. சுமார் 12 அடி ஆழம் கொண்ட அந்த கால்வாயில் விழுந்த ஈவாலின் மற்றும் பிரிசில்லா படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயணைப்புத்துறையின் உதவியோடு மீட்டு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸில் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.