ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு; புகழேந்திக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

 

ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு; புகழேந்திக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் தங்கள் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் புகழேந்தி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தி கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்கி கடந்த ஜூன் 14-ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தனர். கட்சியிலிருந்து நீக்குவதற்கு அவர்கள் தெரிவித்த காரணம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் ஓபிஎஸ் ஈபிஎஸ் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும் என புகழேந்தி எம்.பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு; புகழேந்திக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

இந்த வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியின் விதிகளுக்கு மீறி செயல்பட்டதால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.

புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டியதற்கான அவசியம் இல்லை என தெரிவித்தார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்வது தொடர்பாக புகழேந்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினமே சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுமா? என்பது பற்றியும் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.