Home தமிழகம் "குட்கா உரிமை மீறல்" நோட்டீஸை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

“குட்கா உரிமை மீறல்” நோட்டீஸை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

2017 ஆம் ஆண்டு சட்ட பேரவைக்குள் தமிழகத்தில் குட்கா பொருட்கள் எளிதாக கிடைப்பதாக கூறி திமுக எம்எல்ஏ-க்கள் குட்காவை கொண்டுவந்தனர். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டமன்றத்துக்கு எடுத்து வந்தது தொடர்பான உரிமை மீறல் குழு திமுக எம்எல்ஏ-க்கள் 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்த நிலையில் குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக தான். இதனால் சபாநாயகருக்கு எந்த அவமதிப்பும் செய்யவில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் திமுக தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து குட்கா உரிமை மீறல் நோட்டீஸூக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில் குட்காவை சட்டப்பேரவைக்கு கொண்டுவந்ததாக திமுகவினருக்கு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது சில அடிப்படை தவறுகள் இருப்பதாகத் தீர்ப்பில் நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் முக ஸ்டாலின் உட்பட 21 எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நோட்டீஸ் அனுப்பவும், அப்படி அனுப்பப்படும் நோட்டீஸில் மனுதாரர்கள் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

பாமக ‘எந்த சின்னத்தில்’ போட்டியிடுகிறது தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தொகுதி பங்கீட்டுக்கு முன்னர், பாமகவின் 40 ஆண்டுகால கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றி வைத்தது. அதாவது,...

“என்னது 10.5% ஒதுக்கீட்டிற்கு ராமதாஸ் காரணமா?… அத வேற யாருட்டயாவது சொல்ல சொல்லுங்க” – சுளுக்கெடுத்த வேல்முருகன்!

பாமகவை விட்டு பிரிந்து வந்ததிலிருந்தே தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ராமதாஸைக் கடுமையாக விமர்சித்துவருகிறார். தற்போது 10.5% உள் ஒதுக்கீடு குறித்து ராமதாஸை விமர்சித்திருக்கிறார். இன்று காலை செய்தியாளர்களைச்...

கமலுக்கு நன்றி சொன்ன திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்படும் என்று திமுக தெரிவித்ததால், தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில், நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தி வந்தபோது, 6 சீட்டு வேண்டாம்...

முத்தூட் பைனான்ஸ் குழுமத்தலைவர் காலமானார்!

பிரபல நிதி நிறுவனங்களுள் ஒன்றான முத்தூட் பைனான்ஸ் குழுமத்தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் உடல்நலக்குறைவால் காலமானார். நாட்டில் நகைக் கடன் வழங்கும் பிரபலமான நிறுவனம் முத்தூட் பைனான்ஸ். நாடு...
TopTamilNews