துப்பாக்கிச் சூடு நடத்திய தி.மு.க எம்.எல்.ஏ ஜாமீனில் தளர்வு! – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

துப்பாக்கிச் சூடு நடத்திய தி.மு.க எம்.எல்.ஏ ஜாமீனில் தளர்வு! – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

திருப்போரூர் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ இதய வர்மனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனில் சென்னை உயர் நீதிமன்றம் தளர்வுகளை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திருப்போரூர் தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் இதயவர்மன். ரியல் எஸ்டேட் உரிமையாளருடன் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் வீட்டில் இருந்து ஏராளமான கள்ளத் துப்பாக்கி,

துப்பாக்கிச் சூடு நடத்திய தி.மு.க எம்.எல்.ஏ ஜாமீனில் தளர்வு! – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தோட்டாங்கள், தோட்டாக்கள் தயாரிக்க பயன்படும் இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இதயவர்மன் உள்ளிட்ட 11 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி இதயவர்மன் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம்

துப்பாக்கிச் சூடு நடத்திய தி.மு.க எம்.எல்.ஏ ஜாமீனில் தளர்வு! – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வழங்க வேண்டும், வேலூரில் தங்கியிருந்து தினமும் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. மற்ற 10 பேரும் திருப்போரூரில் தங்கியிருந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூறியிருந்தது.
தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க சென்னை வர வேண்டி உள்ளது. எனவே, ஜாமீன் உத்தரவில் தளர்வு வழங்க வேண்டும் என்று தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற உத்தரவு படி ரூ.3 லட்சத்தை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கிவிட்டதாக கூறப்பட்டு இருந்தது.

துப்பாக்கிச் சூடு நடத்திய தி.மு.க எம்.எல்.ஏ ஜாமீனில் தளர்வு! – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இதை விசாரித்த நீதிமன்றம், வேலூரில் தங்கியிருந்து தினமும் காலை, மாலை என இரு வேளை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றி, திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்பு வாரம் ஒரு முறை ஆஜராகி கையெழுத்திட்டால் போதும் என்று உத்தரவிட்டுள்ளது. அதே போல், மற்ற 10 பேரும் தினமும் காலை, மாலை ஆஜராக வேண்டும் என்ற உத்தரவையும் மாற்றி, வாரத்துக்கு ஒரு முறை ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது.