தேர்தலில் மதுவும் பணமும் பாய்கிறது – நீதிமன்றம் அதிருப்தி

 

தேர்தலில் மதுவும் பணமும் பாய்கிறது – நீதிமன்றம் அதிருப்தி

வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் மதுவும் பணமும் பாய்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்னர்.

தேர்தல் என்றாலே மக்களுக்கு பணம் கொடுத்து வாக்களிக்க வைப்பது என்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. ஓட்டுக்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்றாலும், பல இடங்களில் அது தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலை இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், சட்டமன்றத் தேர்தல் அல்லாமல் பிற வழக்கறிஞர் தேர்தல்களிலும் பணமும் மதுவும் வழங்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் மதுவும் பணமும் பாய்கிறது – நீதிமன்றம் அதிருப்தி

சட்டப்பேரவை தேர்தலுக்கும் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலுக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விட்டதாகவும் மதுவிற்காக வழக்கறிஞர்கள் தங்களையே விற்கக்கூடிய அளவுக்கு சென்று விட்டதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். அதே போல, வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு அதிகாரிகளையே மிரட்டும் அளவுக்கு போய்விட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

சேலம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையில் இதை தெரிவித்த நீதிபதிகள், தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.