சென்னை உயர் நீதிமன்றத்தை தற்போது திறக்க வாய்ப்பில்லை! – வழக்கறிஞர்களிடம் கூறிய தலைமை நீதிபதி

 

சென்னை உயர் நீதிமன்றத்தை தற்போது திறக்க வாய்ப்பில்லை! – வழக்கறிஞர்களிடம் கூறிய தலைமை நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றத்தை தற்போதைய சூழ்நிலையில் திறக்க முடியாது என்று வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளிடம் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் லூயிசால் ரமேஷ் தலைமையில் வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது உயர் நீதிமன்ற வளாகத்தைத் திறந்து வழக்கு விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைத் தெரிவித்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தை தற்போது திறக்க வாய்ப்பில்லை! – வழக்கறிஞர்களிடம் கூறிய தலைமை நீதிபதிபின்னர் இது குறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், “கானொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடத்தப்படுவதால் வழக்கறிஞர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். எனவே, நீதிமன்றங்கள் திறக்கப்படும் வரை இறுதி விசாரணைக்கு வழக்குகளை பட்டியலிடக் கூடாது. காணொலி காட்சியில் ஆஜராகவில்லை என்ற காரணத்திற்காக வழக்குகள் தள்ளுபடி செய்யக் கூடாது.
குற்ற வழக்குகளில் போலீசார் தேடும் நபர் மாஜிஸ்திரேட்டு முன்பு சரணடைய முடியாத நிலை உள்ளது. எனவே, சரண் அடைய விரும்பும் குற்றவாளிகளுக்கு உதவ சென்னை மாவட்டத்துக்கு என ஒரு நீதிபதியை நியமிக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்தோம்.

சென்னை உயர் நீதிமன்றத்தை தற்போது திறக்க வாய்ப்பில்லை! – வழக்கறிஞர்களிடம் கூறிய தலைமை நீதிபதி
அதற்கு தலைமை நீதிபதி, தற்போது உயர் நீதிமன்ற வளாகத்தை திறக்க முடியாது. கொரோனாத் தொற்று ஒழிந்து, மக்கள், ஊழியர்கள், வழக்கறிஞர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்த பின்னரே நீதிமன்றத்தைத் திறக்க முடியும் என்று கூறினார். மேலும், சரண் அடைய விரும்பும் குற்றவாளிகளைச் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டுக்கு பணி ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்தார் என்றனர்.