காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?

 

காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?

முதல்வருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பாலியல் புகார் கொடுத்ததாக பெண் ஐபிஎஸ் அதிகாரி டிஜிபியிடம் புகார் ஒன்றை அளித்தார். பாதுகாப்பு பணியை முடித்து விட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்த வழியில் காரில் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது. ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்தது.

காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?

இதனிடையே இந்த வழக்கை கையிலெடுத்த மனித உரிமை ஆணையம் தமிழக அரசு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்ட நிலையில் ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புகாரளிக்க விடாமல் பெண் எஸ்.பியை தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் மீதும் சிபிசிஐடி வழக்கு பதிந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. விசாரணையின் போது காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா? என நீதிபதி எழுப்பினார். மேலும், வழக்கு விசாரணைக்கு இன்று பிற்பகல் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். ராஜேஷ் தாஸ் மீதான புகாரை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.