வழக்கறிஞர்களின் உடையை மாற்றிய கொரோனா

 

வழக்கறிஞர்களின் உடையை மாற்றிய கொரோனா

வழக்கறிஞர்கள் கறுப்பு கோட், கறுப்பு கவுன் அணிய தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 7 முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணையில் பங்கேற்கும் வழக்கறிஞர்கள் வெள்ளை சட்டையுடன் NECK BAND மட்டும் அணிந்து ஆஜராகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கோட், கவுன் அணிய விலக்கு கோரி மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் அளித்த கோரிக்கையை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.

வழக்கறிஞர்களின் உடையை மாற்றிய கொரோனா

கருப்பு கோட் மற்றும் கருப்பு கவுன் அணிவதிலிருந்து விலக்கு அளித்து கடந்த மே மாதம் 14ஆம் தேதி இந்திய பார் கவுன்சில் பிறப்பித்த நிர்வாக உத்தரவை பின்பற்றவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.