டெங்கு பரவலை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

 

டெங்கு பரவலை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

தமிழகத்தில் டெங்கு பரவாமல் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி இருப்பதால் டெங்கு காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனை தடுக்கும் வண்ணம் சென்னையின் பெரும்பாலான இடங்களில் ஆளில்லா ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

டெங்கு பரவலை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

அப்போது, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்துள்ளதால் டெங்கு பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.