மனித உணர்வு என்பது அனைவருக்கும் ஒன்றுதான் – தமிழக அரசைக் குட்டிய சென்னை உயர் நீதிமன்றம்

 

மனித உணர்வு என்பது அனைவருக்கும் ஒன்றுதான் – தமிழக அரசைக் குட்டிய சென்னை உயர் நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் வெளிநாட்டவராக இருந்தாலும் மனித உணர்வு என்பது அனைவருக்கும் ஒன்றுதான் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து, ஆளுநருக்கு கோப்பு அனுப்பியது. ஆனால், அது தொடர்பான முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் முருகனின் தந்தை இலங்கையில் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கை ஆன்லைன் வீடியோவில் பார்க்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அனுமதி தர தமிழக அரசு மறுத்தது. இலங்கையில் உள்ள தன்னுடைய அம்மாவிடம் பேச அனுமதி கேட்டபோது, அதற்கு அனுமதி தர மறுத்தது தமிழக அரசு.

மனித உணர்வு என்பது அனைவருக்கும் ஒன்றுதான் – தமிழக அரசைக் குட்டிய சென்னை உயர் நீதிமன்றம்இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் இருக்கும் நளினி, முருகன், தன்னுடைய உறவினர்களுடன் வாட்ஸ் ஆப் காலில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தினமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு வழக்கறிஞர், “இது இரு நாட்டு பாதுகாப்பு தொடர்பான விவகாரம். வெளிநாட்டில் வசிப்பவர்களிடம் வீடியோ கால் மட்டுமல்லாமல் தொலைபேசி வாயிலாகக் கூட சிறைக்கைதிகள் பேச அனுமதிக்க விதிகள் இல்லை” என்றார்.

மனித உணர்வு என்பது அனைவருக்கும் ஒன்றுதான் – தமிழக அரசைக் குட்டிய சென்னை உயர் நீதிமன்றம்இதைக் கேட்ட நீதிபதி கிருபாகரன், “தன்னுடைய தந்தையின் மரணம் தொடர்பாக வெளிநாட்டில் வசிக்கும் தன் தாயிடம் முருகன் தொலைபேசி மூலமாக பேசுவதால் என்ன பாதுகாப்பு பிரச்னை வந்துவிடப் போகிறது? முருகன் வெளிநாட்டவராக இருந்தாலும் மனித உணர்வு என்பது அனைவருக்கும் ஒன்றுதான்” என்று கூறி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.