திமுகவின் கோட்டையாக மாறிய சென்னை!

 

திமுகவின் கோட்டையாக மாறிய சென்னை!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை காலை முதலே நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 157 இடங்களிலும், அதிமுக கூட்டணி 77 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையாக வெற்றிபெற்றுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக தற்போது ஆளும்கட்சியாக, மாறியுள்ளது திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் கோட்டையாக மாறிய சென்னை!

இந்த சூழலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் திமுகவே அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. அண்ணாநகர் தொகுதியில் திமுகவின் எம்.கே.மோகன், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின், ஆர்.கே.நகர் தொகுதியில் ஜே.ஜே.எபினேசர், எழும்பூர் தொகுதியில் ஐ.பரந்தாமன், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மயிலாப்பூர் தொகுதியில் த.வேலு,
பெரம்பூர் தொகுதியில் ஆர்.டி.சேகர், ராயபுரம் தொகுதியில் ‘ஐ ட்ரீம்’ மூர்த்தி , சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன், திருவிக நகர் தொகுதியில் தாயகம் கவி, ஆயிரம் விளக்கு தொகுதியில் எழிலன், தி.நகரில் ஜெ.கருணாநிதி, வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றியழகன், விருகம்பாக்கம் தொகுதியில் பிரபாகரராஜா, வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா, துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.