சென்னையில் 740 டன் அமோனியம் நைட்ரேட்டை உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது! – அப்புறப்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னையில் 740 டன் அமோனியம் நைட்ரேட்டை உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது! – அப்புறப்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னையில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடி மருந்து இருப்பு வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
லெபனான் தலைநகர் பைரூட்டில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து வைத்திருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர். விவசாயத்தில் உரம் தயாரிக்க பயன்படும் அமோனியம் நைட்ரேட்டைக் கொண்டு வெடி மருந்தையும் தயாரிக்க முடியும். இப்படி சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட அமோனியம் நைட்ரேட்டை லெபனான் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து துறைமுகம் பகுதியில் வைத்திருந்தனர்.

சென்னையில் 740 டன் அமோனியம் நைட்ரேட்டை உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது! – அப்புறப்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னையிலும் இதே போல் அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. 740 டன் அமோனியம் நைட்ரேட்டை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து மணலில் உள்ள கிடங்கில் பத்திரமாக வைத்துள்ளனர். இது மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது மேலும், கிடங்கைச் சுற்றி வீடுகள் இல்லை என்பதால் மக்கள் பயப்பட வேண்டாம் என்று சுங்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னையில் 740 டன் அமோனியம் நைட்ரேட்டை உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது! – அப்புறப்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்
இந்த நிலையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்!

சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!” என்று கூறியுள்ளார்.