தங்கம் வாங்க போறீங்ககளா.. இது தான் சரியான நேரம்!

 

தங்கம் வாங்க போறீங்ககளா.. இது தான் சரியான நேரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் சரிவைக் கண்டது. தொழில்துறையின் தேக்கம் காரணமாக ரூ.35 ஆயிரத்துக்கு மேல் விற்கப்பட்டு வந்த தங்கம் விலை குறைந்து கொண்டே வந்து ரூ.33 ஆயிரத்தில் நீடித்தது. தங்கம் இப்படியே குறைந்து விடும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு நேற்று அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியது. காலை, மாலை என இருவேளைகளிலும் தங்கம் விலை அதிரடியாக ஏற்றத்தைக் கண்டது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் சரிந்துள்ளது.

தங்கம் வாங்க போறீங்ககளா.. இது தான் சரியான நேரம்!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.33,680க்கு விற்பனையாகிறது. அதன் படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.4,210க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.70 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,500க்கும் விற்பனையாகிறது.